புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக வாக்கெடுப்பு நாளை (20) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், இதில் 130க்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று டலஸ் அழகப்பெரும வெற்றியீட்டுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
டலஸ் அழகப்பெரும தரப்புக்கும் சஜித் அணிக்கும் இடையில் இன்று பிற்பகல் 3.00 மணிக்குப் முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் சில குழப்பங்கள் இருந்தாலும், இன்று மத்தியஸ்தம் செய்து கலந்துரையாடி தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 78





