சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைக்கப்படவுள்ளது.

லிட்ரோ நிறுவனத் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 246 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

அத்துடன், 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 99 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

அதேபோல், 2.3 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்