இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஆரம்பம்!

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில், வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது.

தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பு, வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தலைக் கையாளுதல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகக் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் எம்.எ சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், க.கோடீஸ்வரன், எஸ்.சிறிதரன், ஞா.சிறிநேசன், குகதாசன், சிறிநாத் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டி!

”இலங்கை தமிழரசுக் கட்சி இம்முறை தனித்து உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும்” இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தாம் முற்றும் மாறுபட்ட நிலைமையினையே எதிர்பார்ப்பதாகவும், எனவே தாம் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறு இருப்பினும் ஒரு கட்சி தனியாக நிர்வாகத்தை அமைப்பது என்பது சாத்தியப்பாடு குறைந்த அளவில் காணப்படுவதால், தேர்தலில் பின்னர் தாம் மற்றைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து நிர்வாகங்களை அமைக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், வட்டாரக்கிளை தலைவர்கள், மாவட்ட கிளை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவரை பொதுச்செயலர் சுமந்திரன் காப்பாற்றுவது ஏன் https://jaffnajet.com/why-is-general-secretary-sumanthiran-saving-him/

சிறப்புச் செய்திகள்