திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளிவரும்போது அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அப்படி பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த நடிகை கன்னட திரையுலகில் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாக உள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் உலகளவில் ரூ. 855+ கோடிக்கும் மேல் வசூல் செய்தது. மேலும் இந்திய சினிமாவில் 2025ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.
அது வேறு எந்த படமும் இல்லை காந்தாரா தான். இந்த புகைப்படத்தில் உள்ள நடிகை காந்தாரா படத்தில் வில்லியாக மிரட்டிய ருக்மிணி வசந்த் தான்.

கன்னடத்தில் சப்த சாகரடாச்சே எல்லோ படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனம் கவர்ந்தவர் ருக்மிணி வசந்த். தமிழில் Ace படத்தின் மூலம் அறிமுகமானார். பின் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மதராஸி படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





