வெளிநாடு செல்லும் பசிலின் முயற்சி முறியடிப்பு

வெளிநாட்டிற்கு செல்வற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, எதிர்ப்பிற்கு மத்தியில் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளார்.

விமான நிலையத்திற்குள் பசில் ராஜபக்ஸ சென்ற போது, அங்கிருந்த பெருந்திரளான பயணிகள் தமது எதிர்ப்பை வௌியிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், பட்டுப்பாதை பிரமுகர் நுழைவாயிலில் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளனர்.

குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள், நாட்டிலிருந்து வௌியேறுவதற்காக பட்டுப்பாதை பிரமுகர் நுழைவாயிலை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதன் காரணமாக, அந்த பகுதியில் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்