இலங்கைக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு பிரித்தானிய வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் தமது பிரஜைகளை கோரியுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதால், மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடானது போக்குவரத்து, வணிகங்கள் மற்றும் அவசர சேவைகளை பாதிக்கிறது.
இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இதன்போது, போக்குவரத்து பாதிப்பு, பாதைமூடல், அமைதியின்மை என்பன ஏற்படுகின்றன.
இதன்காரணமாக இலங்கைக்கு அத்தியாவசியமான பயணங்களை மாத்திரம் மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு, பொதுநவலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் கோரியுள்ளது.
நியூசிலாந்தும்
இலங்கைக்கான தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு நியூசிலாந்து தமது நாட்டு பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டள்ளது.
இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.
எரிபொருள் இன்மையால் பொது போக்குவரத்து, வாடகை வாகனம், உணவு விநியோகம் என்பனவற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக இலங்கைக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு நியூசிலாந்து கோரியுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு பிரித்தானிய வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் தமது பிரஜைகளை கோரியுள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





