இலங்கைக்கு டொலர் வழங்க தயாராகும் புலம்பெயர் தமிழர் அமைப்பு

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான அந்நிய செலாவணியை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக, உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. இதற்கான சட்டஏற்பாடுகளை நாடாளுமன்றில் நிறைவேற்றுமாறு அந்த அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தினால் உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அண்மையில் நீக்கப்பட்டது. ஜெனீவா மனித உரிமை பேரவையின் மாநாடு அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனை சமாளிக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தாம் கருதுவதாக […]

சந்தையில் கோழி இறைச்சி விலையில் வீழ்ச்சி

சந்தையில் கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சியும், முட்டைக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழிப் பண்ணையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஆர்.எம்.ரத்நாயக்க கூறுகையில், முட்டைக் கட்டுப்பாட்டு விலையில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக முட்டை உற்பத்தி செய்யும் விவசாயிகள் கோழிகளை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 700 ரூபா வரை குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். சந்தையில் முட்டையின் பல்வேறு விலைகள் காரணமாக, முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை […]

யாழ்ப்பாணத்தில் அதிகார சபையினரிடம் சிக்கிய வர்த்தகர்கள்!

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு எதிராக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோழி முட்டைகளுக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெள்ளை நிற முட்டை 43 ரூபாவும் , பழுப்பு நிற முட்டை 45 ரூபாவுக்கு விற்பனை செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முட்டைகளின் விலைகளை கட்டுப்பாட்டு விலைக்குள் விற்காது அதிக விலைக்கு வர்த்தகர்கள் விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் , […]

வௌிநாடு செல்ல எதிர்பார்ப்பவர்களுக்கான அறிவிப்பு

வெளிநாட்டு தொழிலுக்காக செல்வோர் விரைவில் தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வசதியாக குடிவரவு திணைக்களத்தில் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த விசேட விசேட கருமபீடத்தை திறப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அங்கீகாரம் அளித்திருந்தார். முன்னேடி திட்ட நடவடிக்கைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விரும்பும் அனைத்து இலங்கையர்களுக்கும் வசதியாக நேற்று […]

300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு தற்காலிக தடை!

பல்வேறு அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை விதித்து சிறப்பு வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். இதன்படி பொதியிடப்பட்ட பால் உட்பட்ட சுமார் 300 பொருட்களுக்கு தற்காலிக இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. போதுமான அந்நிய செலாவணி கையிருப்பை கையாளும் வகையில் இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் விபரம் புலத்தையும் நிலத்தையும் […]

மீண்டும் எரிபொருள் வரிசை?

நாட்டில் மீண்டும் எரிபொருள் வரிசையில் நிற்கும் போக்கு ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வாரந்தோறும் எரிபொருள் விநியோகம் குறைக்கப்படுவதால், எரிபொருளைப் பெறுவதற்கு வரிசைகள் உருவாகி வருவதாகவும் அச்சங்கம் கூறுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எவ்வித பிரச்சினையுமின்றி எரிபொருளை வழங்கக்கூடிய நிலையில், எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு மட்டும் எரிபொருள் வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, QR முறைமையின் அடிப்படையில் எரிபொருளைப் பெற மக்கள் […]

வாரத்துக்கு 30 லீற்றர் எரிபொருள் வழங்காவிடின் அரசாங்கம் வீழ்த்தப்படும்

முச்சக்கர வண்டித் தொழிலில் ஈடுபடுத்தப்படும் முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்துக்கு 30 லீற்றர் எரிபொருள் தேவைப்படுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. மேலதிக விவாதங்கள் தேவையற்றவை என அதன் தலைவர் குறிப்பிட்டார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அவ்வாறு செ புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை […]