இலங்கை மத்திய வங்கி பணம் அச்சிடுவது பணவீக்கத்தைத் தூண்டுகிறது

வேறு கடனாளிகள் இல்லாத நிலையில் அரசாங்கத்திற்கு நிதியளிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி பணத்தை அச்சிடுவது பணவீக்கத்தை தூண்டுவதாக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரி பீட்டர் ப்ரூயர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகரித்து வரும் பணவீக்கத்தைத் தடுப்பதற்கு மத்திய வங்கியின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதும் பண நிதியளிப்பை நீக்குவதும் மிக முக்கியமான பகுதியாக இருக்கும் என அவர் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். “மத்திய வங்கியின் முறையான சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் மத்திய வங்கிச் சட்டம், இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதில் […]

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்!

புத்தளம் வைத்தியசாலையில் முதல் தடவையாக தாயொருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. 24 வயதுடைய இளம் தாய் ஒருவரே இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக புத்தளம் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சுமித் அன்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். அவர்களில் ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்கள் உள்ளனர். தற்போது, ​​குறித்த நான்கு குழந்தைகளும் புத்தளம் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் சம்பின் ஜயவர்தனவின் மேற்பார்வையில் பாதுகாப்பாக சிகிச்சை பெற்று வருகின்றனர். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் […]

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு மேலும் நட்டம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது விமானங்களுக்குத் தேவையான எரிபொருளை இந்தியாவிலிருந்து பெற்றுக் கொள்வதன் காரணமாக மாதாந்தம் ஏழு மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக நட்டத்தை சந்திக்க வேண்டியிருந்தது. இந்த இழப்பு, எரிபொருள் வாங்குவதற்கும், இந்தியாவுக்குப் பயணம் செய்வதற்கும், எரிபொருள் மற்றும் விமானங்களின் தேய்மானத்துக்கும் ஆகும் செலவை ஈடுசெய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இருபத்தைந்து முதல் முப்பது வரையிலான விமானங்கள் எண்ணெய் பெற இந்தியாவுக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது. இந்தப் பயணம் மேலதிக பயணம் என்பதோடு விமானத்தின் தேய்மானம் நீண்ட […]

பசிலுக்கு வெளிநாடு செல்ல அனுமதி!

முன்னாள் நிதியமைச்ச பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் 2023 ஜனவரி 15 ஆம் திகதிவரையான காலப்பகுதியினுள் வெளிநாடு சென்றுவர நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

கடந்த ஐந்து நாட்களாக உலக சந்தையில் எண்ணெய் விலை குறைவு

கடந்த ஐந்து நாட்களாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 93.78 அமெரிக்க டொலராகவும், WTI பீப்பாய் ஒன்றின் விலை 87.95 டொலராகவும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

டொலர்களை செலுத்தி எரிவாயுவை முன்பதிவு செய்ய வாய்ப்பு

வெளிநாட்டில் இருப்பவர்கள் டொலர்களை செலுத்தி இலங்கையில் எரிவாயுவை முன்பதிவு செய்து தமது நண்பர்களுக்கு விநியோகிக்கும் முறைமை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்திற்குத் தேவையான டொலர்களை கையிருப்பில் வைத்திருக்க முடியுமென நம்புவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். இதற்காக மிகவும் குறைந்த தொகையான 15 டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் […]

ஒரு டொலரின் கொள்முதல் விலையை 300 இலங்கை ரூபாவுக்கு குறைக்க முடியும்

சர்வதேச நாணய நிதியம் (IMF), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் உலக வங்கி ஆகியவற்றில் இருந்து நிதி வருவதால், ஒரு அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 300 ரூபாவுக்கு குறைக்க முடியும் என தான் நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். “பணம் அனுப்புதல் மற்றும் நிதி உட்பாய்சல் அதிகரிப்பால் ஒரு அமெரிக்க டொலரின் கொள்வனவு விலையை சுமார் ரூ. 300 ஆக குறைக்க முடியும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது […]