கால்நடைகளைக் கடத்திச் சென்ற குற்றச் சாட்டில் 7 பேர் கைது!

முல்லைத்தீவிலிருந்து 2 லொறிகளில் கால்நடைகளை கடத்திச்சென்ற 7 பேரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் நெல் கொண்டுசெல்வதாகக் கூறி முல்லைத்தீவிலிருந்து பேருவளை மற்றும் கல்முனைக்கு கால்நடைகளை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் பொலன்னறுவையில் உள்ள அரிசி ஆலைகளுக்கு நெல் கொண்டுசெல்லும் போர்வையில் தொடர்ச்சியாக அவர்கள் கால்நடைகளை கடத்திச் சென்றுள்ளமையும் விசாரணைகளில் […]
தமிழ்த் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த சிவில் சமூகம் தீர்மானம்!

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கான சிவில் சமூகத்தின் கூட்டுத்தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டது. தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும் செயற்படுவதும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் இன்று வவுனியா வாடிவீடு விடுதியில் ஒன்றுகூடிய தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்தினர் பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டனர். 1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது. 2. […]
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளின் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 368 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 420 ரூபாவாகும். அதேபோல், ஒரு லீற்றர் டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்படவுள்ள […]
மே தின இசை நிகழ்ச்சிக்காக இந்திய பாடகர்கள் இலங்கை வருகை

அரசாங்கத்தினால் நாளை (01) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய மே தின பேரணியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் பாடுவதற்காக இந்தியாவிலிருந்து பாடகர்கள் குழுவொன்று இன்று (30) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
மகனை பார்க்கச் சென்ற தந்தையை கட்டிவைத்து மூக்கை கடித்த மச்சான்மார்

“கதவை திறக்காத மனனே…அப்பாவ பார்க்க விடமாட்டாங்க… அவங்கள விரட்டுப்பா.. எனக்கு பயமா இருக்கு” இணையத்தை கதிகலங்க வைத்த ஒரு காணொளி நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை கண்ணீரில் நனைத்தது. என்னதான் நடந்தது? இந்த தந்தை மகன் பாசப்போராட்டம் எதற்காக? கண்ணியாகுமரி – மணவாளக்குறிச்சியை சேர்ந்த பி.எல் பட்டதாரி பிபின் பிரியன் மற்றும் பிலாங்கலை பகுதியைச் சேர்ந்த ஜெபபிரியாவும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றார்கள். இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கின்றார். ஆனாலும், […]
வேலைக்காக வெளிநாட்டுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்

இந்த வருடத்தின் முதல் 04 மாதங்களில் மாத்திரம் இரண்டாயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் மொத்தமாக இரண்டாயிரத்து 64 பேர் தென்கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, உற்பத்தித்துறை தொடர்பான வேலைகளுக்காக ஆயிரத்து 708 பேரும், மீன்பிடித்துறைக்கு 351 பேரும், கட்டுமானத்துறைக்கு 5 பேரும் தென்கொரியாவுக்குச் சென்றுள்ளனர். இவர்களில் ஆயிரத்து 892 பேர் முதல் முறையாக தென்கொரியாவுக்கு வேலைக்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]
இடிமின்னல் தாக்கி முன்னாள் போராளி பலி

முல்லைத்தீவு – ஐயங்கன்குளம் பகுதியில் இடிமின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம், இன்று (29) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மழை பெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மரத்தின் கீழே நின்றிருந்தவர்கள் மேலே இடி விழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் ஐயங்கன்குளம் பகுதியை சேர்ந்த முன்னாள் போராளியான மூன்று பிள்ளைகளின் தந்தை காளிமுத்து சண்முகராஜா (49) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். மேலும், அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் பிரபாகரன் (26) என்ற இளைஞர் […]