அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்கள் தொடர்பான விபரம் வெளியானது!

நாளை மறுதினம் முதல் அமுல்படுத்தப்படவுள்ள பேருந்து பயணக் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பேருந்து பயணக்கட்டணத்தை அதிகரிப்பதற்குக் கடந்த 29 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய பேருந்து பயண கட்டணங்கள் 17.44 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! 1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙 2 ஆம் பரிசு: […]

சகலருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை

நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட சகல இளைஞர், யுவதிகளுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டையினை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பிளொக் செயின் எனப்படும் தொழினுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அடையாள அட்டை தயாரிக்கப்படவுள்ளது. இது இளைஞர்களின் கல்வி, தொழில்சார் தகுதிகள் மற்றும் ஏனைய தகுதிகளுக்கான தரவுத்தளமாக இயங்கும் சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இலத்திரனியல் அடையாள அட்டைகளைத் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் தமித்த […]

கோழி இறைச்சி, முட்டை விலைகள் குறைந்தன

பண்டிகைக் காலங்களில் கடுமையாக அதிகரித்து வந்த முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் தற்போது குறைந்துள்ளன. 750 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை தற்போது 700 ரூபாவிலிருந்து 690 ரூபாவாக உள்ளதாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோழி இறைச்சியின் விலை 50 முதல் 60 ரூபா வரையிலும், முட்டையின் விலை 3 ரூபாவினாலும் குறைந்துள்ளன. அதன்படி ரூ.26 ஆக இருந்த முட்டை தற்போது ரூ.23க்கு விற்கப்படுகிறது. யாழில் உள்ள உங்கள் தாரணி […]

51ஆயிரம் பட்டதாரிகள் நிரந்தர அரச ஊழியர்களாக நியமனம்!

வேலையற்ற பட்டதாரிகள் 51ஆயிரம் பேருக்கு இன்று முதல் அரச துறையில் நிரந்தர நியமனம் வழங்கப் படவுள்ளது. இதற்கமைய பயிற்சியில் இருக்கும் 51,000 பட்டதாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அபிவிருத்தி உத்தியோ கத்தர்களாக நியமிக்கப்படவுள்ளதுடன், அவர்களில் ஒரு வருட பயிற்சியைப் பூர்த்தி செய்த 42,500 பேருக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. 2021 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பயிலுனர் களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட குழுவினருக்கு ஒரு வருடம் நிறைவடைந்த பின்னர் ஏப்ரல் 1 ஆம் திகதி நிரந்தர நியமனம் […]

கப்பல் கட்டணங்களை டொ லரில் கோருவதால், முக்கிய ஏற்றுமதித் துறைகளுக்கு கடும் தாக்கம்

இலங்கையின் வங்கிகளில் அமெரிக்க டொலர்கள் இல்லாததால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிஏற்றுமதித் துறைக்கும் பரவியுள்ளது.சரக்குக் கட்டணங்கள் டொலரில் செலுத்தப்பட வேண்டும் என கப்பல் சேவை நிறுவனங்கள் கோருகின்றன. தேயிலை மற்றும் இறப்பர் துறைகள் உட்பட முன்னணி ஏற்றுமதியாளர்கள், அமெரிக்கடொ லரில் பணம் செலுத்தினால் மட்டுமே ஏற்றுமதிக்கான அனுமதியை ஏற்பாடு செய்ய முடியும் என்று உத்தியோகபூர்வமாகவும் உத்தியோக பூர்வமற்ற விதத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை , மத்திய வங்கி , கப்பல் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிலோன் அசோசியேஷன் ஒவ் […]

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை ஒரே மாதத்தில் பவுணுக்கு 5000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இலங்கை சந்தையில் 22 கரட் தங்கத்தின் விலை 1,12,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. உலக சந்தையில் தங்கத்தின் விலை அமெரிக்க டொலரின் விலைக்கேற்ப நிர்ணயிக்கப்படுகின்றது. இன்றைய நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1818 டொலராக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் 1,21,500 ரூபாவாக காணப்படுகின்றது. தங்கத்தின் பெறுமதி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வது எப்போதுமே நட்டமாகாது. […]

ஆண்டு இறுதியில் உணவுப் பணவீக்கம் 22.1 சதவீதமாக அதிகரிப்பு

உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்பினால் கடந்த டிசம்பர் மாதம் பணவீக்கமானது தூண்டப்பட்டிருந்ததாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து உணவுப் பணவீக்கம், கடந்த நவம்பர் மாதத்தில் 17.5 சதவீதத்திலிருந்து டிசம்பர் மாதம் 22.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவல்லாப் பணவீக்கம் நவம்பர் மாதம் 6.4 சதவீதத்திலிருந்து டிசம்பர் மாதம் 7.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! நீங்கள் வாங்கும் […]