உர நிறுவனங்களுக்கு 150 கோடி அதிக தொகை செலுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பரிசோதனை

2018 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 11 உர நிறுவனங்களுக்குத் தேசிய உரச் செயலகத்தின் ஊடாக 150 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்ற சம்பவம் தொடர்பில் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கமத்தொழில் அமைச்சின் ஊடாக இந்த விசாரணைகள் இடம்பெறுவதாகத் தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன ஹெவகே எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் உர நிவாரணத்தை வழங்குவதற்காக நாட்டுக்குக் குறைந்த விலையில் உரத்தைக் கொண்டு […]
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை விரிவுப்படுத்த புதிய ஒப்பந்தங்கள்!

இலங்கை பணியாளர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை விரிவுப்படுத்தும் வகையில் இந்த வருடம் பல புதிய ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதில் ஜப்பான் மற்றும் இஸ்ரேலில் புதிய தொழில் வாய்ப்புகள் உள்ளடங்குவதாக அதன் ஊடகப் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார். வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துக் கொள்ளுமாறு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு […]
மீன்பிடித்துறை பாரிய அளவில் பாதிப்படைந்துள்ளது

திடீர் என அண்மையில் எரிபொருட்களின் விலையை அதிகரித்ததன் காரணமாக மீன்பிடித்துறை பாரிய அளவில் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, வெளிநாட்டவர்கள் இலங்கையின் கரையோர பகுதிகளில் நிலத்தினை கையேற்பதன் காரணமாகவும் மீன்பிடித்துறை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அகில இலங்கை மீனவர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் அருண பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கரையோர பகுதிகளில் உள்ள மீன் வளங்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகத் தெரிவித்துள்ள அவர், இலங்கையில் உள்ள சகல மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளும் ஒன்று […]
900 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கவுள்ள இந்தியா

900 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா விரைவில் இலங்கைக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை பரிமாற்ற ஒப்பந்தமாகவும், மிகுதி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை எரிபொருள் கொள்வனவுக்காக கடனாகவும் வழங்கப்பட உள்ளது. அத்துடன், அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகளை வாங்குவதற்காக கடனாக மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பின்னர் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! நீங்கள் வாங்கும் […]