இந்தியாவில் இருந்து 500 பேருந்துகள் இறக்குமதி

இந்தியாவின் கடனுதவித் திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 32 – 35 ஆசனங்கள் கொண்ட 500 பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக 2020 ஜனவரி மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய, பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக முற்கூட்டிய தகைமைகளைக் கொண்ட 03 நிறுவனங்களிடமிருந்து போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளது. குறித்த விலைமுறிகளின் மதிப்பாய்வின் பின்னர் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய 32 ஆசனங்களைக் கொண்ட 500 பேரூந்துகளைக் […]

வீட்டில் பதுக்கிய 875 கிலோ மஞ்சள் பறிமுதல்!

இலங்கைக்கு இரவில் கடத்துவதற்காக மண்டபம் அருகே வீட்டில் பதுக்கியிருந்த 875 கிலோ மஞ்சளை பொலிஸார் பறிமுதல் செய்துள்னர். இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த மஞ்சள் மூடைகள் பதுக்கி வைத்திருப்பதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, வேதாளை தென் கடற்கரை பகுதியில் கியூ பிரிவு, மண்டபம் பொலிஸார் துரித சோதனை நடத்தினர். அங்கு ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த தலா 35 கிலோ வீதம் 25 மூடைகளில் […]

சீன சுற்றுலா இயக்குனர்கள், முகவர்கள் இலங்கை சந்தையை இலக்கு வைப்பதற்கு எதிர்பார்ப்பு

சீனாவின் பயணத் துறை சார்ந்த பிரதிநிதிகளை பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுடன் இணைந்து 2021 டிசம்பர் 30ஆந் திகதி நகர மண்டபக் கூட்டத்தில் சந்தித்தது. சுற்றுலா நடத்துநர்கள், முக்கிய சுற்றுலா முகவர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் உட்பட 60 அழைக்கப்பட்ட விருந்தினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இலங்கை வழங்கும் தனித்துவமான அனுபவங்கள் குறித்த அவர்களது கவனத்தை தூதுவர் கலாநிதி பாலித கொஹொன ஈர்த்தார். இலங்கையின் பாரம்பரியமற்ற சுற்றுலா அம்சங்களான சுதேச மருத்துவம், படகோட்டம், […]

தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கிராம் கோதுமை மா

தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கிராம் கோதுமை மாவை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். நேற்றி (03) ரவு கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் இதுதொடர்பாக நிதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இதற்கமைவாக ஒரு கிலோ கோதுமை மாவை 80 ரூபாவிற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்தில் பதிவு செய்துள்ள அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இந்தக் கோதுமை மா மானியம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார். […]

உரத் தட்டுப்பாடு காரணமாக தேயிலை உற்பத்தி தேங்கியுள்ளதாக குற்றச்சாட்டு

உரத் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி நடவடிக்கைகள் தேங்கியுள்ளதால் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். முன்னைய வருடங்களை விட கடந்த வருடம் குறைந்தளவிலான தேயிலை விளைச்சலே கிடைக்கப் பெற்றதாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கான தேசிய சம்மேளனத்தின் காலி மாவட்ட அமைப்பாளர் டீ.கே ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன் அனைத்து பிரதிபலன்களும் அரசாங்கத்தின் அமைச்சரவை ஆசனத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படப்போவதில்லை. அனைத்து பிரதிபலன்களும் இறுதியாகத் தேயிலையை உற்பத்தி செய்யும் சாதாரண தொழிலாளருக்கே வரப்போகின்றது. சிறு தேயிலைத் […]

இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகள் மாத்திரமே கையிருப்பில்!

நாட்டில் இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளே கையிருப்பில் உள்ளதாக இலங்கை ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒளடத இறக்குமதிக்கான முன்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் நாணய கடிதத்தைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக ஒளடதங்களுக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. ஒளடத இறக்குமதிக்காக முன்னர் வழங்கப்பட்ட முக்கியத்துவம் தற்போது வழங்கப்படுவதில்லையென அந்த சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் 80 சதவீதமானவை இறக்குமதி செய்யப்படுகின்றன. எமது செய்திச் சேவையின் ஆய்வுகளின் படி, நாட்டில் தற்போது ஒளடதங்களுக்கான […]

இலங்கையில் தடுப்பூசி அட்டை: சுகாதார அமைச்சினால் புதிய மென்பொருள்

தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் வகையில் புதிய மென்பொருள் மற்றும் குறியீட்டு எண்கள் அறிமுகப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் குறித்த நடவடிக்கைகள் நிறைவுபெறும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாத்திரம், பொது இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன்,இம்மாத இறுதிக்குள் குறித்த நடவடிக்கைகள் நிறைவுபெறும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு […]