உலகளவில் உணவு விலைகள் கடுமையாக அதிகரிப்பு!

2021ஆம் ஆண்டில் உலக உணவு விலையானது, 2020ஆம் ஆண்டை விடவும், 28 சதவீதத்தினால் அதிகரித்திருந்ததாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. உணவு விலைச் சுட்டெண்ணானது, 2021ஆம் ஆண்டு சராசரியாக 125.7 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது, ஒரு தசாப்தத்தில் பதிவான அதிகபட்ச அதிகூடிய சராசரியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோதுமையின் விலை 31.3 சதவீதத்தினாலும், தானியங்களின் விலை 27 சதவீதத்தினாலும், சோளத்தின் விலை 44.1 சதவீதத்தினாலும் அதிகரித்திருந்ததாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு […]
மன்னார் சூரிய சக்தி மின் நிலையத்தை அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்க பசில் திட்டம்

மன்னார் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் நிலையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்க நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மின் உற்பத்தி நிலையத்திற்கான டெண்டர் கோருவதற்கு சம்பந்தப்பட்ட இராஜாங்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், அமைச்சர் பசில் ராஜபக்ஷ அதனை ‘அதானி நிறுவனத்திடம்’ ஒப்படைக்கப் போவதாக அவர் வலியுறுத்துகிறார். குறிப்பாக, இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் இந்தியாவின் […]
இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம் – இந்திய

கடினமான சந்தர்ப்பங்களை எதிர்கொள்ளும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் நோக்கில் இலங்கை வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை தாம் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணுவதற்கு இணங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை எண்ணெய்க் குதங்களை அபிவிருத்தி செய்வதற்காக, இரண்டு நாடுகளுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், இந்திய வெளிவிவகார […]
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பு!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 111.54 புள்ளிகளாக அதிகரித்து, தொடர்ந்து 5ஆவது நாளாக இன்றும் வரலாறு காணாத 13, 280.94 புள்ளிகளில் நிறைவடைந்தது. 622.3 மில்லியன் பங்குகள் வர்த்தகமாகி, மொத்த புரள்வு 11.6 பில்லியன் ரூபாவாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! 1 ஆம் பரிசு: ஒரு பவுன் […]
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொவிட் தடுப்பூசி மையம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 24 மணிநேரமும் இயங்கும் தடுப்பூசி ஏற்றல் மையம் இலங்கை விமானப்படையால் நிறுவப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்துவரும் இலங்கையர்கள் இந்தத் தடுப்பூசி ஏற்றல் மையத்தில், முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! 1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙 […]
நாளாந்தம் 90,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க தீர்மானம்!

வீட்டு சமையல் எரிவாயு மற்றும் வணிக சமையல் எரிவாயு கொள்கலன்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை வினைத்திறனாக முன்னெடுப்பதற்காக உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்காலத்தில் நாளாந்தம் சுமார் 90,000 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க உள்ளதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களில், சந்தைக்கு 220,000 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் நேற்று(06) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இன்னும் குறுகிய காலத்துக்குள், […]
சீன உர நிறுவனத்துக்கு 6.9 மில்லியன் டொலர்கள் பணம் செலுத்தப்பட்டது

தரமின்மை காரணமாக நிராகரிக்கப்பட்ட உரத்தை இலங்கைக்கு கொண்டுவந்த சீன உர நிறுவனத்துக்கு 6.9 மில்லியன் டொலர்கள் பணம் செலுத்தப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சேதன உரம், உரிய தரத்தில் இல்லாத நிலையில், அதனை அரசாங்கம் நிராகரித்திருந்தது. இதனால் குறித்த உரம் கப்பலில் இருந்து இறக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது. எவ்வாறாயினும் இதற்கான கட்டணத்தை இலங்கை வழங்க வேண்டும் என்று சீன உர நிறுவனம் வலியுறுத்தி வந்தது. அதேநேரம் குறித்த நிறுவனத்துக்கு கட்டணத்தை செலுத்துவதற்காக கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் […]