இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு மேலும் விரிவுப்படுத்தப்படும் – தென் கொரிய

கொரியாவில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகளை தென்கொரிய அரசாங்கம் தீவிரமாக ஆராயும் என தென் கொரிய பிரதமர் உறுதியளித்துள்ளார். சியோலில் கொரிய பிரதமருடனான சந்திப்பின் போது, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸினால், ‘இலங்கைத் தொழிலாளர்களுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்குமாறு’ விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே அந்நாட்டு பிரதமர் இதனைத் தெரிவித்தார். தற்போது தென் கொரியாவில் சுமார் 22,000 இலங்கையர்கள் தொழில்புரிகின்றனர். ஒவ்வொரு வருடமும் சுமார் 520 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவர்கள் எமது நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதாக […]
15 ஆயிரம் சிறிய ஹோட்டல்கள் மூடல்

நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளின் 15 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் மூடப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது. ஹோட்டல்களுக்கு சமையல் எரிவாயு கிடைக்கின்றபோதிலும் அவை அவர்களது நாளாந்த தேவைக்கு பற்றாக்குறையாக காணப்படுவதன் காரணத்தினாலேயே விறகு அடுப்பு பயன்படுத்தப்பட்டு வருதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! நீங்கள் வாங்கும் 3 […]
இலங்கையில் தங்கத்தின் கையிருப்பு வீழ்ச்சி

மார்கழி மாத இறுதியில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 3,137.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. கார்த்திகை மாத இறுதியில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு1,588.4 மில்லியன் டாலர்களாக இருந்தது.அத்தோடு நாட்டின் தங்கத்தின் கையிருப்பின் பெறுமதி 382.2 மில்லியன் டொலராக ஆக காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாத இறுதியில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதி 175. 4 மில்லியன் டொலர் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, 206.8 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம், மத்திய வங்கியினால் விற்பனை […]
மேலும் 05 இலட்சம் லிட்டர் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி

மேலும் ஒருதொகை நனோ நைட்ரஜன் திரவ உரம் இம்மாத இறுதிக்குள் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக கமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது. 05 இலட்சம் லிட்டர் நனோ நைட்ரஜன் திரவ உரம் கொண்டுவரப்படவுள்ளதாக கமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். பெரும்போகத்தை ஆரம்பிப்பதற்கு தாமதமான மாவட்டங்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கமைவாக பதுளை, நுவரெலியா, வவுனியா, அனுராதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நெற்செய்கைக்காக தேவைப்படும் உரமாக இதனை பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கமர்ஷல் உர நிறுவனத்தின் […]
இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (07.01.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! 1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙 2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲 3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱 நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது […]
புதிய கைத்தொழில்களை ஆரம்பிக்க 60 முதலீட்டாளர்களுக்கு காணிகள்

கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள 32 கைத்தொழில் பேட்டைகளில், புதிய கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்காக, 60 முதலீட்டாளர்களுக்கு நேற்று(06) காணிகள் வழங்கப்பட்டன. கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில், கொழும்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. 60 புதிய கைத்தொழிற்சாலைகளுக்காக, குறித்த கைத்தொழில் வலயங்களில், சுமார் 39 ஏக்கர் காணி ஒதுக்கிடப்பட்டுள்ளது. இந்தக் கைத்தொழில்களுக்காக, புதிய முதலீட்டாளர்களினால் 5,330 மில்லியன் ரூபா நிதியைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்தப் புதிய தொழில்கள்மூலம் 3,200க்கும் மேற்பட்ட நேரடி […]
எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்ய ஒப்பந்தம் கைச்சாத்து

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் நேற்று(06) கைச்சாத்திடப்பட்டது. திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், கனியவள கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி மற்றும் ட்ரிங்கோ பெற்றோலியம் டேர்மினல்ஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில், நேற்று மாலை இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் உதய கம்மன்பில, இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த 99 எண்ணெய் குதங்களில், 85 குதங்கள் இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் வருவதாக குறிப்பிட்டுள்ளார். […]