கொழும்பு துறைமுக நகர நடைபாதை இன்று திறப்பு

கொழும்பு துறைமுக நகர நடைபாதை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவின் 65ஆவது வருட பூர்த்தியினை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போது, குறித்த நடைபாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். 500 மீட்டர் தூரத்திற்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகர நடைபாதையினை நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரையில் […]
சேவை வரியினை நேரடியாக பெறுவதற்கு திறைசேரிக்கு அதிகாரம்

முன்மொழியப்பட்ட விசேட பண்ட மற்றும் சேவை வரியினை நேரடியாக பெறுவதற்கு திறைசேரிக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது. அதேபோன்று திருத்தப்பட்ட பெறுமதி சேர் வரியினையும் திறைசேரி நேரடியாக அறவிட முடியும். இந்த பணிகளுக்காக திறைசேரி செயலாளரினால் பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அந்த பணிகளை முன்னெடுக்க பிரதி செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஏலவே வெளியிடப்பட்டுள்ளது. விசேட பண்ட மற்றும் சேவை வரியினை அறவிடும் பிரிவின் நிர்வாகம், வரிசேகரிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் உத்தேச அதிகாரியின் கீழ் செயல்படும். […]
இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

ஏற்றுமதி வருமானத்தை மாற்றுவதற்கான விதிகள், தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குப் பொருந்தாது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் அண்மையில் வெளியிடப்பட்ட மீள் அனுப்புதல் மற்றும் ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவது தொடர்பான விதிகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முறையான வழிகளில் வருமானத்தை அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது நிதியை எந்தவொரு வணிக வங்கியிலும் வெளிநாட்டு நாணயமாகவே பேணலாம் என அறிக்கை ஒன்றினை வெளியிட்டு மத்திய வங்கி […]
நாளாந்தம் இரண்டரை மணிநேரத்திற்கு மின்சாரம் துண்டிப்பு?

தற்போதைய நிலையில் தேவைக்கு அமைய எண்ணெய் கிடைக்காவிடத்து, நாளாந்தம் இரண்டரை மணிநேரத்திற்கு மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் மின்சார சபை அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கமைய மின்சாரத்தை துண்டிக்கும் நேரம் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 6 மணிவரையிலான காலப்பகுதியில் ஒரு மணிநேரம் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, பிற்பகல் 6 மணிமுதல் 9 மணி வரையிலான காலப்பகுதியில் 45 நிமிடங்கள் என்ற அடிப்படையில் இரண்டு தடவைகள் மின்சாரத்தை துண்டிப்பது […]
கொமர்ஷல் ATM வலையமைப்பு 2021ம் ஆண்டில் 848.4 பில்லியன் ரூபாவையும் விநியோகித்துள்ளது

கொமர்ஷல் வங்கியின் தன்னியக்க பண விநியோக இயந்திர வலையமைப்பு நாடு முழுவதும் ATM இயந்திரங்களையும் பண மீள்சுழற்சி இயந்திரங்களையும் (CRMs) உள்ளடக்கியது. இந்த வலையமைப்பின் ஊடாக இலங்கையர்களின் முக்கிய பண்டிகை காலத்தையும் 2022 புத்தாண்டு வரவேற்பையும் உள்ளடக்கிய டிசம்பர் மாதத்தில் 91.872 பில்லியன் ரூபா விநியோகிக்கப்ட்டுள்ளது. டிசம்பர் மாதம் 31ம் திகதி இந்த வலையமைப்பு ஒரே நாளில் 4.234 பில்லியன்களை விநியோகித்துள்ளது. இது 2021ம் ஆண்டு ஏப்பிரல் 9 மற்றும் பத்தாம் திகதிகளில் ஒரே நாளில் விநியோகிக்கப்பட்ட […]
மியன்மாரிலிருந்து 100,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி

மியன்மாரிலிருந்து 100,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மியன்மாருடன் நேற்று (07) புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. நாட்டில் உள்ள அரிசி இருப்பை பேணுவதற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் பணிப்புரையின் பேரில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. எதிர்காலத்தில் நாட்டு மக்களுக்கு ஒரு கிலோ அரிசியை 100 ரூபாவிற்கும் குறைவான விலையில் வழங்குவதே இதன் நோக்கமாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். யாழில் உள்ள உங்கள் […]
நாட்டில் இன்றும் (08), நாளையும் (09) மின்சாரத் தடை அமுலாக்கப்பட மாட்டாது

நாட்டில் இன்றும்(08), நாளையும் மின்சாரத் தடை அமுலாக்கப்பட மாட்டாது என மின்சார சபை அறிவித்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக நாட்டில் இரவு வேளையில் மின்சாரத் தடை ஏற்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. எவ்வாறாயினும், எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால், இலங்கை மின்சார சபைக்கு உராய்வு எண்ணெய் வழங்கப்பட்டதையடுத்து, மின் துண்டிப்பு தீர்மானத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்றும், நாளையும் மின்விநியோகத்தடை ஏற்படுத்தப்பட மாட்டாது. எனினும், வார நாட்களில் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தொடரபாக இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. யாழில் […]