ரூபாவிற்கு மாற்றும் விதிமுறைகள் தொடர்பான அறிவிப்பு

ஏற்றுமதி வருமானத்தை ரூபாவிற்கு மாற்றுவது தொடர்பில் சமீபத்தில் வௌியிடப்பட்ட விதிமுறைகள் சில தரப்பினரால் தனிப்பட்ட நலன்களுக்காக தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வௌிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணம் உரிமம் பெற்ற வங்கிகளால் வலுக்கட்டாயமாக ரூபாவிற்கு மாற்றப்படுவதாக தவறான தகவல் பரப்பப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை வௌியிட்டுள்ளது. ஏற்றுமதி வருமானத்தை ரூபாவிற்கு மாற்றுவது தொடர்பிலான விதிமுறைகள் வௌிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களால் அனுப்பப்படும் பணத்திற்கு பொருந்தாது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. […]

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரிப்பு

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம், கடந்த டிசம்பர் மாத இறுதியில் 3137.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரித்துள்ளது. நவம்பர் மாத இறுதியில் இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 1588.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. அதேநேரம், நவம்பர் மாத இறுதியில், நாட்டின் தங்கத்தின் கையிருப்பின் பெறுமதி 382 தசம் 2 மில்லியன் டொலராக காணப்பட்டது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாத இறுதியில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதி 175.4 மில்லியன் டொலர் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, 206. 8 மில்லியன் […]

நெல் அறுவடை ஆரம்பம்

திருகோணமலை மற்றும் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தற்போது நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ளது. வெல்லாங் குளம், குரங்குபாஞ்சான், கிரான், வாழை மடு போன்ற பகுதிகளிலுள்ள விவசாயிகள் நெல் அறுவடையினை இயந்திரம் மூலமாகச் செய்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த முறை அறுவடை குறைவாக உள்ளதாகவும் தங்களுக்கு போதுமான பசளை இன்மையால் இவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த முறை குறித்த பகுதியில் சுமார் 350 ஏக்கருக்கும் அதிக நிலப்பரப்பில் நெல் பயிர்செய்கை […]

2.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க திட்டம்!

இந்த ஆண்டில் 2.5 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 194,495 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டதாக சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் கடந்த ஆண்டு இலங்கைக்கு வந்துள்ளனர். 56,268 பேர் இந்தியாவிலிருந்தும், அதற்கு அடுத்தபடியாக ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, யுக்ரேன் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் […]

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,789 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, தங்கத்தின் விலை 2சதவீதத்தால் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! 1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙 2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் […]

ஆயிரம் தேசிய பாடசாலைகள் வேலைத்திட்டம் ஆரம்பம்

சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டவாறு மேலும் ஒரு திட்டத்தை யதார்த்தமாகும் வகையில், ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மொனராகலை – சியம்பலாண்டுவ மஹா வித்தியாலயம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில், இன்று (07) முற்பகல் தேசிய பாடசாலையாக மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. ஆயிரம் தேசிய பாடசாலைகள் வேலைத்திட்டம் ஆரம்பம்… * பாடசாலை அல்லது பல்கலைக்கழகக் கல்வியை முடித்துக்கொண்டு வெளியேறும் மாணவர்கள் சகல திறமைவாய்ந்தவர்களாக இருக்கும் கல்வி முறையை ஏற்படுத்துதல் … * […]

மேலும் இரண்டு எரிவாயு கப்பல்கள் நாட்டுக்கு வந்துள்ளன

சந்தையில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு எரிவாயு கப்பல்கள் நாட்டுக்கு வந்துள்ளன. இதற்கமைய குறித்த கப்பல்கள் உஸ்வெடகெய்யாவ பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த கப்பலில் உள்ள எரிவாயுவின் தரத்தை பரிசோதிப்பதற்காக இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் அதிகாரிகளினால் எரிவாயு மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் குறித்த எரிவாயு இதுவரையில் தரையிறக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதுதவிர பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்றும் நாட்டை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலும் உஸ்வெடகெய்யாவ பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ளது. […]