பால் மாவின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

ஐஸ்கிரீம் மற்றும் தயிர் உற்பத்தி விகிதத்தை குறைத்து திரவ பால் மற்றும் பால் மாவின் உற்பத்தி விகிதத்திற்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சந்தையில் பால் மாவுக்கான தட்டுப்பாட்டைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடமாடும் சேவையின் ஊடாக திரவப் பாலை விநியோகிக்கும் முயற்சி உட்பட நாளாந்த பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கால்நடை இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை […]
மதுபானம், சிகரட்டின் விலைகள் அதிகரிப்பு

எதிர்வரும் சில நாட்களில் மதுபானம் மற்றும் சிகரட்டின் விலையினை அதிகரிப்பது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு சிறப்பு சந்தைப் பொருள் மற்றும் சேவை வரியை விதிக்கும் அரசாங்கத்தின் முடிவிற்கு அமைய இந்த விலை அதிகரிப்பு இடம் பெறலாம் என நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன. சிறப்பு சந்தைப் பொருள் மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பில், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன் வைத்த யோசனைக்கு ஏற்கனவே […]
கறுப்புப் பட்டியலிலிருந்து தம்மை நீக்குமாறு கோரும் மக்கள் வங்கி

சீனாவின் கறுப்புப் பட்டியலில் இருந்து தம்மை நீக்குமாறு இலங்கை மக்கள் வங்கி கோரிக்கை முன் வைத்துள்ளது. கடன் கடிதத்திற்கு அமைய சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக சீன தூதரகத்துக்கு அறிவித்தே மக்கள் வங்கி தன்னை கறுப்புப் பட்டியலில் இருந்து விடுவித்துக்கொள்வதற்கான கோரிக்கையை முன் வைத்துள்ளது. இந்நிலையில் இன்று (10) குறித்த கறுப்புப்பட்டியலில் இருந்து தம்மை நீக்கிக்கொள்ள எதிர்பார்ப்பதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது. முன்னதாக ஒப்பந்தத்தை மீறி கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமையால் […]
மரக்கறி விலை சற்று வீழ்ச்சி

நுவரெலியாவில் மரக்கறி விலை ஓரளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வழங்கிய அவர், பண்டிகை காலம் நிறைவடைந்துள்ள நிலையில், நுவரெலியாவில் மரக்கறி விலை ஓரளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், விவசாயிகளின் கொள்வனவு விலையும் குறைந்துள்ளதாகவும், மற்றும் சிறிய இலாபத்தை வைத்துக்கொண்டு மொத்த விற்பனை விலையும் ஒரே நேரத்தில் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 1 கிலோ முட்டைகோஸ் 165 ரூபாவாகவும், 1 கிலோ கெரட் […]
வெற்றுப் போத்தலுக்கு 10 ரூபா – புதிய திட்டத்தை அமுல்படுத்தியுள்ள சதொச நிறுவனம்

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் லங்கா சதொச நிறுவனம் புதிய தண்ணீர் போத்தல் ஒன்றை சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து பந்துல குணவர்தன தெரிவிக்கையில். “இந்த குடிநீர் போத்தலை 35 ரூபாவிற்கு விற்கிறோம். அத்தோடு லங்கா சதொச நிறுவனம் மூலம், நாட்டின் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களையும் இணைக்கும் விதமாக லங்கா சதொச நிறுவனம் இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது. ஒரு வெற்று போத்தலைத் திருப்பிக் கொடுத்தால் 10 ரூபாய் கிடைக்கும்” எனத் தெரிவித்தார். அத்தோடு, […]
சீனா எமது உயிர் தோழன்

சீனா எமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 65 ஆண்டு பூர்த்தி மற்றும் புகழ்பெற்ற இரப்பர் அரிசி ஒப்பந்தத்திற்கு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமையை முன்னிட்டு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கௌரவ வாங்க் யீ அவர்களின் பங்கேற்புடன் கொழும்பு துறைமுக நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, […]
பண நோட்டுக்கள் அச்சிடுவதை நிறுத்த மத்திய வங்கி திட்டம்

தொடர்ந்தும் பண நோட்டுக்களை அச்சிடுவதை நிறுத்திக்கொள்ள இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது. பண நோட்டுக்களை அச்சிடுவதற்கு பதிலாக, தேவையான பணத்தை நிதிச் சந்தையிலிருந்து பெற மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது. அதன்படி, அடுத்து வரும் ஒரு மாதத்துக்குள், வங்கி வட்டி வீதங்கள் உயர்வடையலாம் என மத்திய வங்கியின் உள்ளக தகவல்கள் தெரிவித்தன. தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் காலத்தில் மட்டும், சுமார் 1.3 ட்ரில்லியன் ரூபா பணம் புதிதாக அச்சிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு பணம் வரையறை இன்றி […]