இலங்கையின் பணவீக்கம் 2024 ஜூன் மாதம் 2.4% ஆக அதிகரித்துள்ளது!

சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஜூன் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2024 மே மாதம் 1.6% ஆக பதிவாகிய இலங்கையின் பணவீக்கம் 2024 ஜூன் மாதம் 2.4% ஆக அதிகரித்துள்ளது அத்துடன் மே 2024 இல் 0.5% ஆக இருந்த உணவு வகைக்கான பணவீக்கம் ஜூன் 2024 இல் 1.9% ஆக அதிகரித்துள்ளது. மேலும், 2024 மே மாதத்தில் 2.4% ஆக […]

தமிழ் பொது வேட்பாளர்- தமிழ் கட்சிகள் உடன்படிக்கையில் கைச்சாத்து!

தமிழ்த் தேசியக் கட்சிகளிற்கும், தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வானது இன்று முற்பகல் 12 மணி அளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று கைச்சாத்திடப்பட்டது. சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகளினதும் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து பொது வேட்பாளரை நிறுத்துவதற்குக் கடந்த காலங்களில் […]

பெண்ணின் தலைக்குள் 77 ஊசி – மந்திரவாதி கைது

ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்தவர் ரெஷ்மா பெஹரா 19 வயதான பெண்ணின் தலையில் இருந்து 77 ஊசிகள் எடுக்கப்பட்டுள்ளன. சில காலங்களாக பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்த இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் மந்திரவாதி ஒருவரை சந்தித்துள்ளார். அதன்பிறகு சில காலம் எந்த பிரச்சினையும் இல்லாமல் ரெஷ்மா வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென தலையில் தாங்க முடியாத வலி ஏற்பட்டு மருத்துவமனையில் ரெஷ்மா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலை பகுதியில் சிடி ஸ்கேன் […]

யாழில் தனது குழந்தையையும் கணவனையும் கைவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி!

தனது இரண்டரை வயது குழந்தையை கைவிட்டு, கள்ள காதலனுடன் ஊரை விட்டு வெளியேறிய பெண்ணையும், காதலனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவன் மற்றும் தனது குழந்தையுடன் வசித்து வந்த குடும்ப பெண்ணொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது காதலுடன் ஊரை விட்டு சென்று இருந்தார். இது தொடர்பில் கணவனால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண்ணையும், அவரது காதலனான […]

வவுனியாவில் தகாத தொழில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது.!

வவுனியா – தேக்கவத்தைப் பகுதியில் விடுதி ஒன்றில் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் நேற்று தெரிவித்தனர். வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிசார் இரவு விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சோதனை செய்த போது அங்கு முறையான அனுமதியின்றி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் காலி […]

சிலரை மட்டும் ஏன் கொசுக்கள் துரத்தி துரத்தி கடிக்கிறது

வெயிலிலும், மழையிலும் கொசுக்கள் இன்று படையெடுத்து மனிதர்களைத் தாக்குகின்றது. மனித இரத்தத்தில் இருக்கும் குறிப்பிட்ட வகையான புரோட்டீன்கள் மூலம் கொசுக்கள் முட்டைகளை உற்பத்தி செய்கின்றன. கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் போது, கொசுவின் எச்சில் மனித இரத்தத்தில் உட்செலுத்தப்படுகிறது. இப்படி உட்செலுத்துவதனால் தான் கொசுக்கள் மூலம், மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜிக்கா வைரஸ் போன்ற நோய்த்தொற்றுக்கள் ஏற்படுகின்றன. கொசுக்கள் ஒரு சிலரை மட்டும் அதிகம் கடிக்கின்றது. இனி கொசுக்கள் கடிக்க எதுவெல்லாம் காரணமாக இருக்கக்கூடும் என்பதைக் காண்போம். உடைகள்வெளிர் […]

தொடர் சிகிச்சையில் ஷாலினி.

தனது மகன் ஆத்விக் தனது நெற்றியில் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை ஷாலினி அஜித் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை ஷாலினி மருத்துவ சிகிச்சையில் இருந்து வரும் நிலையில், மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் அவரை பத்திரமாக பார்த்து வருவதாக கூறுகின்றனர். நடிகை ஷாலினி விரைவில் பூரண குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். நடிகை ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் அஜித் […]