நாணயமாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி இன்று(10) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 268 ரூபா 55 சதம், விற்பனை பெறுமதி 276 ரூபா 98 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபா 77 சதம், விற்பனை பெறுமதி 233 ரூபா 61 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் […]
ஏழு நாட்களில் 16000 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை

இந்த வருடத்தின் முதல் வாரக் காலப்பகுதியில் மாத்திரம் 16,000 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அதேநேரம் சுற்றுலாப்பயணிகளின் சுகாதார பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்கு, புதிய தடுப்பூசி மையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்தில் 24 மணிநேர தடுப்பூசி மையமும் இயங்கி வரும் நிலையில் பயணிகள் தங்களுக்கான தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள முடியும். வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதன்மூலம் மேலும் சுற்றுலாப்பயணிகளின் வருகையினை எதிரப்பார்க்க […]
உரத்தை முறையாக வழங்குமாறு ஜனாதிபதி தெரிவிப்பு

சிறுபோகம் முதல் விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை முறையாக வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று(11) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போது முதல் மேற்கொள்ளுமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார். தற்போது மேற்கொள்ளப்படும் பெரும் போகத்திற்கு அவசியமான உரம் இன்மையால் விவசாயிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதேவேளை, நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் சுற்றுலாத்துறையைக் கட்டியெழுப்புவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள வெளிநாட்டுக் கையிருப்பு பற்றாக்குறையை ஈடு செய்வதற்கு சுற்றுலாத்துறை உதவியாக இருக்கும் […]
இலங்கை வரும் 4 முக்கிய வெளிநாட்டு பிரதிநிதிகள்

நான்கு முக்கிய வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஹங்கேரியின் வெளியுறவு அமைச்சர் பீட்டர் சிஜார்டோ, துருக்கியின் வெளியுறவு அமைச்சர் மெவ்லூட் கவுசோக்லு, இங்கிலாந்து வெளியுறவு மற்றும் பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹ்மத பிரபு மற்றும் கொரியாவின் தேசிய சட்ட மன்றத்தின் சபாநாயகர் பார்க் பியோங்- சேக் ஆகியோர் இந்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளனர். ஹங்கேரியின் வெளி விவகார அமைச்சர் பீட்டர் சிஜார்டோ இலங்கையில் […]
எதிர்வரும் 10 நாட்களில் இடைக்கிடையே மின்துண்டிப்பு

எதிர்வரும் 10 நாட்கள் காலப்பகுதியில், இடைக்கிடையே மின் துண்டிப்பு ஏற்படக்கூடும் என அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்துக்கு அமைய மின்துண்டிப்பு ஏற்படக்கூடும். இதன் காரணமாகவே, முன்நடவடிக்கையாக பொதுமக்களை அறிவுறுத்த மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். யாழில் உள்ள உங்கள் […]
கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி!

கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) ஒட்டுமொத்த விலைச் சுட்டெண்கள் கடந்த வாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை வெளிப்படுத்தி, பல சாதனைகளைப் படைத்த பின்னர் இன்று (10) எதிர்பாராதவிதமாக வீழ்ச்சியடைந்தது. கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 183.76 புள்ளிகள் குறைந்து 13,097.18 ஆக நிறைவடைந்தது. கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய மொத்த புரள்வு 8.8 பில்லியன் ரூபாவாகும். விலைச்சுட்டிகள் இன்று முன்னைய நாள் அனைத்துப் பங்கு விலைச்சுட்டி 13,117.07 13,280.94 S&P ஸ்ரீலங்கா 20 விலைச்சுட்டி […]
கறுப்புப்பட்டியலில் இருந்து மக்கள் வங்கியை நீக்கியது சீனா

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரம் தொடர்பான கடன் சான்றுப்பத்திரத்திற்குரிய 6.9 மில்லியன் டொலர்கள் இலங்கையினால் செலுத்தப்பட்டதையடுத்து சீனாவினால் அதன் கறுப்புப்பட்டியலில் இருந்து மக்கள் வங்கி நீக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரம் தொடர்பான ஒப்பந்தத்தை மீறி கடன் சான்றுப்பத்திரத்திற்கான கொடுப்பனவைச் செலுத்தாமையினால் மக்கள் வங்கியைக் கறுப்புப்பட்டியலில் இணைப்பதாக இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் கடந்த 2021 அக்டோபர் மாதம் 29 ஆம் திகதி அறிவித்திருந்தது. சீனத்தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக செயலகத்தினால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகத் தூதரகம் விளக்கமளித்திருந்தது. வர்த்தக […]