நாட்டின் நலன் கருதி மாத்திரம் அரசாங்கம் செயற்படுமாயின் கடன்களை திரும்ப செலுத்த முடியும்

நாட்டின் நலன் கருதி மாத்திரம் அரசாங்கம் செயற்படுமாயின் வெளிநாடுகளில் இருந்து பெற்றுக் கொண்டுள்ள கடன்களை திரும்ப செலுத்த முடியும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் தனிப்பட்ட பிரஜைகளின் எண்ணங்களுக்கு இடமளிக்க கூடாது. அரசாங்கம் நாடு தொடர்பில் அக்கறை செலுத்தி செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படும் போது பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களை இலகுவகாக செலுத்த […]
சமையல் எரிவாயு தொடர்பில் வர்த்தமானி வெளியானது

சமையல் எரிவாயு (LP Gas), கொள்கலன், ரெகுலேட்டர்கள் மற்றும் குழாய் ஆகியவற்றை தரப்படுத்த இலங்கை தரக் கட்டுப்பாட்டு நிறுவகத்துக்கு (SLSI) அதிகாரமளித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானிக்கு நிதியமைச்சர் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! 1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙 2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் […]
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி?

நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைக்கப்பெற்று, பொருளாதார நிலைமை வழமைக்கு திரும்பியதன் பின்னர் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க வாய்ப்பு இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதியை இடைநிறுத்துவது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வாகனங்கள் மற்றும் ஓடுகள் தவிர அத்தியாவசியமற்ற அனைத்து பொருட்களும் தற்போது இறக்குமதி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். […]
2 இலட்சம் மெற்றிக் டன் நாட்டரிசி இறக்குமதி?

திறந்த சந்தையில் போதுமானளவு அரிசித் தொகை பேணுவதை உறுதி செய்வதற்காக 2 இலட்சம் மெற்றிக் டன் நாட்டரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது. அத்துடன் சம்பா அரிசிகளுக்கு பதிலீடாக ஒரு இலட்சம் மெற்றிக் டன் ஜிஆர் குறுகிய தானிய அரிசி வகையை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை, இந்த ஆண்டு சிறுபோகச் செய்கைக்கு விவசாயிகளுக்கு உள்ளூர் சேதன உர விநியோத்திற்காக உரக் கொள்வனவுக்கான பெறுகை செயன்முறையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 2022 […]
இலங்கை ரூபாவாக மாற்றுதல் தொடர்பில் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட விதிகள்

இலங்கைக்கான ஏற்றுமதிப் பெறுகைகளின் மீளனுப்பல் மற்றும் அத்தகைய ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கை ரூபாவாக மாற்றுதல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட விதிகள் சுயநலங்கொண்ட குறித்த சில தரப்பினரால் தவறுதலாகப் பொருட்கோடல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, உரிமம் பெற்ற வங்கிகளினால் தொழிலாளர் பணவனுப்பல்கள் முழுவதையும் அத்தகைய வெளிநாட்டுச் செலாவணி நிதிப் பெறப்பட்டதும் வலுக்கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்றுவதனை இலங்கை மத்திய வங்கியின் விதிகள் தேவைப்படுத்துகின்றன என வாத ஆதாரமற்ற ஊகம் விசமத்தனமாகப் பரப்பப்பட்டுள்ளது. ஏற்றுமதிப் பெறுகைகளின் மாற்றல் மீதான […]
மத்திய வங்கியின் பன்னாட்டு ஒதுக்கு முகாமைத்துவமானது மாறும்தன்மை

மத்திய வங்கியின் பன்னாட்டு ஒதுக்கு முகாமைத்துவமானது மாறும்தன்மை கொண்டதாகவும் நுட்ப செயன்முறையுடையதாகவும் காணப்படுவதுடன், இது பொதுவாக நாட்டின் வெளிநாட்டுச் சொத்துக்கள் உடனடியாக கிடைப்பனவாகவுள்ளதனையும் வரையறுக்கப்பட்ட குறிக்கோள்களை அடையும் விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதனையும் உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சொத்துக்களின் உள்ளடக்கம், நாணயக் கலவை, திரவத்தன்மை தேவைப்பாடுகள், தவணைக் காலம், இலாபத்தன்மை, பாதுகாப்பு போன்ற ஏனைய முதலீட்டுச் சாதனங்களுடன் தொடர்புபட்ட பண்புகளுடன் பொருத்தமான ஒதுக்கு முகாமைத்துவக் கொள்கைகளின் பின்பற்றுதலானது நாட்டிற்கு நாடு மாறுபடுவதுடன் நாட்டின் குறிப்பிட்ட சூழ்நிலைகள் மற்றும் பொருளாதார […]
இலங்கையின் தொழில் துறைகளை மேம்படுத்த ஒத்துழைப்போம் – ஆசிய அபிவிருத்தி வங்கி

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்றுறைகளை மேம்படுத்துவதற்கு, ஆசிய அபிவிருத்தி வங்கி ஒத்துழைப்பை வழங்குமென, அதன் உபதலைவர் சிக்ஷின் ஷென் (Shixin Chen) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று(10) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரச கூட்டுத்தாபனங்கள் பலவற்றை மறுசீரமைப்பதற்கான நிதி உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியினால், இலங்கைக்கு இந்த ஆண்டில் 786 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. […]