சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட சிகரெட்

சட்டவிரோதமான முறையில் தீர்வை வரி செலுத்தாமல் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கொள்ளுப்பிட்டி நகரின் கடை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பழங்கள் விற்பனை செய்யும் போர்வையில், இந்த சிகரெட்டுக்களை சந்தேக நபர்கள் விற்பனை செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சந்தேக நபர்களிடம் இருந்து 12,000 சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் மாலபே மற்றும் கடவத்த ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என […]
எரிபொருளுக்காக அதிகளவில் செலவிட நேரிடும்

நாட்டுக்கு எதிர்வரும் நாட்களில் எரிபொருட்களைப் பெற்றுக் கொள்ளும்போது சர்வதேச விலையை விடவும் அதிக தொகை செலுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அதன் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர்ஹாசிம் இதனைத் தெரிவித்தார். நாணயக் கடிதங்கள் வழங்கப்படாமையினால் கொழும்பு துறைமுகத்தில் உள்ள இரண்டு எரிபொருள் கப்பல்களுக்குத் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன் கட்டணம் செலுத்தப்படும்வரை நாட்டுக்கு மருந்து பொருட்களை […]
தனியாரினால் 500 அரிசி கொள்கலன்கள் இறக்குமதி!

தனியார் தரப்பினரால் இறக்குமதி செய்யப்பட்ட 500 அரிசி கொள்கலன்கள் நேற்று(13) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வரி நிவாரணத்திற்கு அமைய இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த அரிசி தொகையைச் சந்தைக்கு விநியோகித்தபின்னர் அரிசியின் விலை குறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அரிசி மோசடி இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர் செயற்கை விலை உயர்வைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் சதொச விற்பனை நிலையங்களில் ஒரு கிலோகிராம் நாட்டரிசி 105 ரூபாவுக்கு அதிகமாக […]
யாழில் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் மாபெரும் பரிசு மழை!

யாழில் உள்ள தாரணி சூப்பர்மார்க்கெட்டில் நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! 1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙 2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲 3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱 நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு 1 ஆம் பரிசு: […]
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று(13) வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 270 ரூபா 88 சதம், விற்பனை பெறுமதி 279 ரூபா 35 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபா 63 சதம் விற்பனை பெறுமதி 235 ரூபா 50 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் […]
மட்பாண்டத் தொழிலுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல காலம்!

எரிவாயு நெருக்கடியுடன், சந்தையில் அதிக தேவை இருப்பதால், மட்பாண்டங்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது என்று நுகர்வோர் கூறுகின்றனர். 120 முதல் 200 ரூபா வரை விற்கப்பட்ட மண் பானைகள் தற்போது 450 – 500 ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும் தெரிவித்தனர். நாடளாவிய ரீதியில் உற்பத்தி செய்யும் நான்கு வகையான அடுப்புகளுக்கும் அதிக கேள்வி நிலவுவதால், நாள் முழுவதும் உற்பத்தியில் ஈடுபட்டாலும் தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என களிமண் அடுப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த பருவத்தில் தொற்றுநோயால் […]
5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு தொடர்பான சுற்றறிக்கை வெளியானது

அரச சேவையாளர்களுக்கும், ஓய்வூதியம் பெறுநர்களுக்கும் மாதாந்தம் 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது. மாதாந்தம் வேதனம் பெரும் நிலையான அல்லது தற்காலிக மற்றும் ஒப்பந்த கால ஊழியர்கள் மற்றும் நாளாந்த வேதனம் பெறும் ஊழியர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. வேதனமின்றி விடுமுறையில் இருக்கும் ஊழியர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது. அத்துடன், வேதன விடுமுறையில் இருக்கும் ஊழியர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது. நாளாந்தம் வேதனம் பெரும் நபர்கள் சேவைக்கு சமூகமளிக்க வேண்டிய முழு […]