இலங்கைக்கு நம்பகமான பங்காளியாக இந்தியா எப்போதும் இருக்கும்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையில் தொலை காணொளி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார். இலங்கையின் உறுதியான மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா எப்போதும் இருக்கும் என்பதை மீள உறுதிப்படுத்துவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் இதன்போது வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]
இலங்கையின் புதிய கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தை குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பதில்

சீனாவிடமிருந்து புதிதாக மற்றுமொரு கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை ஈடுபட்டுவரும் நிலையில், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தி என்பவற்றுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு சீனா எப்போதும் தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார். இலங்கைக்குப் பெருமளவிலான இறக்குமதிகளை மேற்கொள்ளும் நாடுகளில் சீனா பிரதான இடத்தை வகிப்பதுடன் கடந்த காலங்களில் சீனா எமது நாட்டிற்குப் பல்வேறு உதவிகளையும் வழங்கியதாகக் கடந்த புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டிய மத்திய வங்கியின் […]
யாழ்.நெடுந்தீவு கடற்கரையில் இறந்து கரையொதுங்கும் மீன்கள்

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்கரையில் அதிகமான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று காலையில் இருந்து இறந்த நிலையில் மீன்கள் இவ்வாறு கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயற்பாட்டுக்கு இந்திய இழுவைமடி மீன்பிடியினை மேற்கொள்ளும் மீனவர்களே காரணமாக இருக்க கூடும் என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! 1 […]
உயர் கடன் இடர் இலங்கை தீவிர நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும், ஐக்கிய நாடுகள் சபை

கொரோனா வைரஸ் பரவலின் விளைவாக ஏற்பட்ட நெருக்கடிகளின் தொடர்ச்சியாக இவ்வருடம் உணவுப்பற்றாக்குறை, வெளிநாட்டுக்கையிருப்பு வீழ்ச்சி, உயர் கடன் இடர் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு இலங்கை முகங்கொடுக்கக்கூடும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டிற்கான உலக பொருளாதார நிலைவரம் மற்றும் வாய்ப்புக்கள் தொடர்பான அறிக்கையில் உலகளாவிய ரீதியில் பொருளாதார இயங்குகையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள காரணிகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது. கொவிட் – 19 வைரஸ் பரவலின் […]
சதொசவில் 4,000 ரூபாவுக்குள் 20 அத்தியாவசிய உணவு பொருட்கள்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட 20 பொருட்கள் அடங்கிய பொதியை, சதொச விற்பனையகம் மூலம் 3,998 ரூபாவுக்குப் பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சதொச விற்பனையகம் இல்லாத பகுதிகளில் உள்ள மக்கள், 1998 என்ற உடனடி அழைப்பு இலக்கத்திற்கு தொடர்புகொள்வதன்மூலம், இந்தப் பொதியைப் வீட்டுக்கே பெற்றுக்கொள்ள முடியும் என நேற்று(14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார். சிறப்பு வர்த்தக நிலையங்களில் 6,521 ரூபாவுக்கும் 5,834 ரூபாவுக்கும் 5,771 ரூபாவுக்கும் இந்தப் […]
கடனில் மூழ்கிய நிறுவனத்தை தனியாளாக மீட்டெடுத்த சிங்கப்பெண்!

இந்தியாவின் மிகப்பெரிய காபி ஷாப் செயின் நிறுவனமான கபே காபி டே நிறுவனத்தின் தலைவர் V G சித்தார்த்தா கடந்த 2019 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டது அகில இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பின்னர் காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடட் (CDEL) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக மறைந்த சித்தார்த்தாவின் மனைவி மாளவிகா ஹெக்டே பொறுப்பேற்றுக்கொண்டார். “பிசினசை லாபகரமானதாக மாற்ற தவறிவிட்டேன்” என இறப்பதற்கு முன்பு சித்தார்த்தா எழுதி வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. நிறுவனத்தின் பெயரில் அவருக்கு […]
ஒரு காலத்துல ஹோட்டல் ஊழியர்…இப்போ முகேஷ் அம்பானியை விட பணக்காரர்

கஷ்டப்பட்டு உழைத்தால் நிச்சயம் முன்னேறலாம் என்பதற்கு உதாரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நபர்களை சுட்டிக்காட்டலாம். அந்த லிஸ்டில் தற்போது இணைந்திருக்கிறார் சங்ப்பெங் சாவோ (Changpeng Zhao) இவரைச் சுருக்கமாக CZ என்று அழைக்கிறார்கள். ஒரு காலத்தில் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் பணிபுரிந்த சங்ப்பெங் சாவோ இப்போது தனது சொத்து மதிப்பில் இந்தியாவின் முக்கிய பணக்காரரான முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார். கனடாவிற்குக் குடியேறிய குடும்பம் சீனாவில் பிறந்தவரான சங்ப்பெங் சாவோ அவரது 12 வயதில் குடும்பத்துடன் கனடாவில் குடியேறினார். […]