1.4 டிரில்லியன் அச்சிடப்பட்டதால் நெருக்கடி சமாளிக்கப்பட்டது

இலங்கை மத்திய வங்கி 2021ஆம் ஆண்டில் மாத்திரம் 1.4 டிரில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் அனில் பெரேரா ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இதனைத் தெரிவித்துள்ளனர். வரலாற்றில் வேறு எந்த வருடமும் இவ்வளவு பெரிய தொகை அச்சிடப்பட்டதில்லை என்றும், பணத்தை அச்சடித்ததன் மூலம் நெருக்கடியை சமாளிக்க முடிந்ததாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார். யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு […]

இலங்கையின் சுற்றுலாத்துறை புத்துயிர் பெறும் : கிமர்லி பெர்னாண்டோ

கொவிட்-19 தொற்று நோய்க்கு மத்தியில் ஆசிய பிராந்தியத்தில் பயணிக்கக்கூடிய பாதுகாப்பான நாடாக இலங்கையை உலக சுற்றுலாப் பேரவை (WTC) பெயரிட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவியான கிமர்லி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 50 வீதத்தை எட்டுவோம் என எதிர்பார்க்கிறோம். அதாவது 2018 ஆம் ஆண்டில் இலங்கை 2.3 மில்லியன் வருகையைப் பதிவு செய்துள்ளது. 2022 இல் அதில் அரைவாசியை அடைவதே எங்கள் இலக்கு என்றும் பெர்னாண்டோ […]

சீன வங்கியிடமிருந்து அரை பில்லியன் டொலர் கடன் கோரி இலங்கை விண்ணப்பம்

சீனாவிலுள்ள சர்வதேச உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளது. இலங்கையில் பசுமை அபிவிருத்தி நடவடிக்கைக ளுக்காக இந்தக் கடனுக்கு விண்ணப்பித்திருந்தது. மேற்படி வங்கி 2016 இல் நிறுவப்பட்டதுடன் இலங்கை அதன் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒன்றாகும். இலங்கை கோரிய கடனை வழங்குவது தொடர்பில் இதுவரை இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! நீங்கள் வாங்கும் […]

இலங்கை கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்குச் செல்ல வேண்டும்

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்கு இலங்கை செல்ல வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ​​நாட்டின் தேசிய வளங்களை கடனை அடைக்கும் நோக்கில் விற்பனை செய்யக் கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். நிதி தர மதிப்பீட்டு நிறுவனங்களால் இலங்கை தரமிறக்கப்படுவது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இலங்கையின் இயலாமையைக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக இந்தத் தடையை நிவர்த்தி செய்வதற்கான சாத்தியமான வழிகளை […]

97 ஆயிரம் மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனைக்கு!

97 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 19ஆம் திகதி ஏல விற்பனை ஊடாக வழங்கப்படவுள்ளதென மத்திய வங்கி அறிவித்துள்ளது. 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 27 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான உண்டியல்களும் ஏலமிடப்படவுள்ளன. அத்துடன், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலமிடப்படவுள்ளதாக மத்திய […]

சீமெந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு

சீமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்களும், உள்ளூர் உற்பத்தியாளர்களும் தெரிவிக்கின்றனர். டொலர் இல்லாதமை காரணமாக சீமெந்து இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்திச் சேவை வினவியபோது அவர்கள் தெரிவித்தனர். முன்னைய காலத்தை விடவும் தற்போது சீமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறான நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி இரண்டு இலட்சம் சீமெந்து பொதிகளைத் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டுக்கு வரவுள்ளது. எனவே, எதிர்வரும் 22 ஆம் திகதியின் பின்னர் சீமெந்து தட்டுப்பாடு குறைவடையும் என சீமெந்து […]

1,700 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் இரண்டு மாதங்களுக்கு அதிக காலம் கொழும்பு துறைமுகத்தில் தேங்கி இருப்பதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு டொலர்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்கு காரணம் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோதிலும், இதுவரையில் உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லையென அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன எமது செய்திச் சேவைக்குத் […]