சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பான நாடாக இலங்கை அறிவிப்பு

கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் ஆசிய வலயத்தில் சுற்றுலா பயணிகள் பயணிப்பதற்கான பாதுகாப்பான நாடாக இலங்கையை உலக சுற்றுலா பேரவை அறிவித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமார்லி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு சுமார் ஒரு மில்லியன் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு ஈர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 44 ஆயிரத்து 294 சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 90 ஆயிரமாக அதிகரித்தது. இந்தநிலையில் […]
தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவேன்

ஜனாதிபதி தேர்தலில் தாம் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிச்சயம் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற மக்கள் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தவறான விமர்சனங்களை முன்வைத்து மக்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும் […]
தற்காலிகமாக நிறுத்துமாறு இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை 7 நாட்களுக்குள் விடுவிக்காதவிடத்து அபராத தொகையை அறவிடும் நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்துமாறு அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் கோரியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் இரண்டு மாதங்களுக்கு அதிக காலம் கொழும்பு துறைமுகத்தில் தேங்கி இருப்பதாக அத்தியாவசியப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு டொலர்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்குக் காரணம் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. […]
அதிவேக நெடுஞ்சாலை: வாகனங்களுக்கு அறவிடும் கட்டணங்கள் தொடர்பான விபரம்

மத்திய அதிவேக வீதியின் மீரிகம முதல் குருநாகல் வரையான பகுதி நேற்று(15) திறக்கப்பட்டதோடு போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று(16) மதியம் 12 மணிவரையில் குறித்த வீதியில் கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாது என நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து குறித்த அதிவேக வீதியைப் பயன்படுத்தும்போது அறவிடப்படும் கட்டணங்கள்குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய சிறிய வாகனங்கள் இரண்டு பரிமாற்று நிலையங்களுக்கு இடையில் பயணிக்கும்போது 100 ரூபாவும், பெரிய வாகனங்கள் பயணிக்கும்போது 150 ரூபாவும் அறவிடப்படும் என […]
தடைகளைத்தாண்டி வெல்லத்துடிக்கும் நம்மவர்

தடைகளைத் தாண்டி வெல்லத்துடிக்கிற நம்மவர்கள் இலங்கைட எந்தப் பாகத்தில இருந்தாலும் அவர்களை வெளி உலகுக்குத் தெரியப்படுத்தி ஊக்குவிக்கவேண்டியது சகோமீ குழுமத்தின்ர கடமையே. இம் முறை இலக்கம் 46 ஆமர் வீதி, கொழும்பில வேல்முருகன் என்கிற நம்மவர் கடந்த ஒரு மாசத்துக்கு முன்பு புதுசாக ஆரம்பிச்சு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிற ஸ்ரீ ஆராக்கியா உணவு உற்பத்தி நிறுவனத்தைப் பற்றி அறிந்து கொள்ளுவோம் வாருங்கள். https://www.youtube.com/watch?v=royUAR8Uc5A யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு […]
கனடாவில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ்ப்பாண தமிழர்!

பேரதிஷ்டம் கனடாவில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ்ப்பாண தமிழர்! கனடாவை சேர்ந்த தமிழர் ஒருவர் அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் 70 மில்லியன் டொலர்களை (1419.72 கோடி இலங்கை ரூபா) வெற்றி பெற்றுள்ளார். பொன்னுத்துரை மனோகரன் (54) என்பவரே, Lotto Max அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். பொன்னுத்துரை மனோகரன் பொன்னுத்துரை, தனது தந்தையின் கனவுகளால் ஈர்க்கப்பட்டு 30 ஆண்டுகளாக அதிஷ்ட இலாப சீட்டுச்களை வாங்கிவருவதாகத் தெரிவித்தார். “ஒரு நாள் […]
இளம் தொழில் முயற்சியாளர் அர்ச்சனா

DERANA STARTUP 2021 தொழில் முயற்சியாளர்களுக்கான போட்டியில் மண்ணின்றிய பயிர்ச்செய்கை முறை (hydroponic) சாத்தியம் என நிரூபித்து யாழ் மாவட்டத்திலிருந்து ஒரே ஒரு பெண் போட்டியாளராக செல்வி. அர்ச்சனா அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மேற்படி போட்டியாளரை வெற்றிபெற செய்யவும், விவசாயத்தில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்திய முயற்சிக்கு ஆதரவு வழங்கவும், DS 25 என type செய்து தை மாதம் 15 இலிருந்து 20 ம் திகதிக்கு இடைப்பட்ட காலப் பகுதிக்குள் 9900 […]