மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகளும் இடைநிறுத்தம்

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சப்புகஸ்கந்தை மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CEYPETCO) இலங்கை மின்சார சபைக்கு 900 மெகாவோட் எரிபொருளை வழங்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களனிதிஸ்ஸயில் உள்ள ஒரு மின் உற்பத்தி நிலையம் மாத்திரம் டீசலுக்கு மேலதிகமாக, நெப்டாவை பயன்படுத்தி இயக்க முடியும். நெப்டா தற்போது முழுமையாக தீர்ந்துள்ளது.இன்று மாலை 5 மணி வரை மாத்திரம் மின் உற்பத்தி நிலையங்கள் இயங்குவதற்குத் தேவையான டீசல் கையிருப்பில் உள்ளது. அதன்பின்னர், 3,000 மெகாவோட் மின்சாரத்தை, […]
மின் தடையைத் தவிர்க்க முடியாத நிலை!

இலங்கையின் மின்னுற்பத்தியை மேற்கொள்ள போதுமான எண்ணெய் வளம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை மின்சார சபைக்கு, கனியவளக் கூட்டுத்தாபனமும் எண்ணெய் வழங்க மறுத்துள்ளது. இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்துடன் மின்சக்தி வளத்துறை அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும் மின்சார சபை முன்வைத்த கோரிக்கையை இலங்கை மற்றும் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் மறுத்துள்ளது. இந்நிலையில் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள எண்ணெய் கப்பலிலிருந்து ஒரு தொகை எண்ணெய் பெற்றுக் கொள்வது தொடர்பாக மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அமைச்சர் காமினி […]
வாகன இறக்குமதியின் போது மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை – ஜனாதிபதி

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய முன்னுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற எண்ணெய்யில் 70 சதவீதம் வாகனங்களுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. மின்னுற்பத்திக்காக 21 சதவீதமும், கைத்தொழில் துறைக்காக 4 சதவீதமும் பயன்படுகிறது. எனவே எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் போது, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய அதிக முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ⏰ யாழில் இருந்து உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேர […]
மின்சார சபைக்கு இனி எரிபொருள் வழங்க முடியாது

கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது. அதனை மீளமைப்பதற்காக இரண்டு தடவைகளில் 3,000 மெற்றிக் டன் டீசல் வழங்கப்பட்டதுடன், இனி டொலர்கள் இன்றி அவ்வாறு எரிபொருளை வழங்க முடியாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை டொலர்களை வழங்கினால், மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்து வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கு […]
ஜப்பானிடம் 3.5 பில்லியன் டொலர்கள் கடனை கோரும் இலங்கை

கடனில் மூழ்கியுள்ள இலங்கை அரசாங்கம் ஜப்பானிடம் இருந்து நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் 3.5 பில்லியன் டொலர் நிதியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடனை டொலராக மாற்றுவதற்கான சரியான அளவு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து தீர்மானம் எட்டப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். வரலாற்று ரீதியாக இலங்கைக்கு அபிவிருத்தி உதவிகளை வழங்கும் ஜப்பான், நிதி உதவி மட்டுமல்லாமல் தொழில்நுட்ப உதவிகளையும் […]
இந்தியாவிலிருந்து எரிபொருள் பெற நடவடிக்கை

மின்சார துண்டிப்பு தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வாக இந்தியாவிடம் இருந்தும் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் எமது செய்திப் பிரிவு வினவிய போது அதற்குப் பதிலளித்த அவர், எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான மாற்று வழிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இருந்தாவது எதிர்வரும் நாட்களுக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு இலங்கை […]
11 நாட்களில் 31,600க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் இந்த ஆண்டின் முதல் 11 நாட்களுக்குள் 31,600க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர். இந்த மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 31,688 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்ததாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வளர்ச்சியடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் 11 நாட்களில் 5,726 சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து […]