சந்தையில் மீண்டும் அரிசி விலை உயர்வு

கடந்த வாரத்தில் சந்தையில் அனைத்து வகையான அரிசிகளின் விலைகளும் மீண்டும் உயர்வடைந்துள்ளன. இவ்வாறு விலை அதிகரிக்கப்படுவதால் உள்நாட்டு அரிசிகளை விற்பனை செய்வது பாரிய சவாலாக உள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களில் சம்பா அரிசி கிலோ ஒன்று 165 ரூபாவுக்கும், நாட்டரிசி கிலோ ஒன்று 148 ரூபாவுக்கும் வெள்ளை அரிசி 157 ரூபாவுக்கும் சிவப்பரிசி 161 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது வெள்ளை அரிசியை தவிர ஏனைய […]

இலங்கையில் தனிநபர் கடன் எட்டு லட்சத்தை தாண்டியது!

தற்போது நாட்டின் தனிநபர் கடன் 800,000 ரூபாவை அண்மித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்ந்தும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதையும், டொலரின் கையிருப்பு துரித வீழ்ச்சியையும் தற்போதைய அரசாங்கத்தினால் சமாளிக்க முடியவில்லை என அவர் ஒப்புக்கொண்டுள்ளார். நாட்டின் கடன் சுமையை குறைக்க சிறிமாவோ பண்டாரநாயக்காவிற்கு பின்னர் எந்த அரசாங்கமும் வெற்றியடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். “இந்த […]

யாழில் உள்ள தாரணி சூப்பர்மார்கெட்டின் பரிசுகளை தட்டிச் சென்ற வெற்றியாளர்கள் விபரம்!

தாரணி சூப்பர்மார்க்கெட்டின் முதலாம் வருட நிறைவையொட்டி பரிசுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்மை அறிந்ததே. இதன் அடிப்படையில் இன்றைய தினம் மூன்று பரிசுப்பொருட்களுக்குமான வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 🪙 அதன்படி முதலாம் பரிசான தங்கக் கட்டியினை அல்லைப்பிட்டியை சேர்ந்த R.ராஜபாரதி அவர்கள் தட்டிச் சென்றுள்ளார். 📲 இரண்டாம் பரிசான சாம்சுங் டேப்லட்டினை நல்லூரைச் சேர்ந்த M.அருள்நேசன் தட்டிச் சென்றுள்ளார். 📱 மூன்றாம் பரிசான சாம்சுங் கைப்பேசியினை திருநெல்வேலியைச் சேர்ந்த திரு.சின்னா என்பவர் தட்டிச் சென்றுள்ளார். குறித்த வெற்றியாளர்களுக்கு அவர்கள் வெற்றிபெற்ற […]

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 268 ரூபா 81 சதம். விற்பனை பெறுமதி 278 ரூபா 27 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபா 14 சதம் விற்பனை பெறுமதி 235 ரூபா 01 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் […]

சுற்றுலா விடுதிகள் – உணவகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

‘வெளிநாட்டவர்களுக்கு மட்டும்’ என்ற கொள்கையைப் பின்பற்றுகின்ற விடுதிகள் மற்றும் உணவகங்களது அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. நாட்டில் இயங்கும் சில உணவகங்கள் மற்றும் விடுதிகள், வெளிநாட்டவர்களுக்கு மட்டும் என்ற கொள்கையைப் பின்பற்றி இலங்கையர்களைப் புறக்கணித்த சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளன. இதுதொடர்பான பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்ட சமயத்தில், அதிலிருந்து மீள்வதற்கு உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பெரும் பங்களிப்பை வழங்கி இருந்தனர். இதேபோன்று […]

மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி

மரக்கறிகளின் விலைகள் குறைந்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். மரக்கறிகள் விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் பருப்பு மற்றும் உருகிளைக்கிழங்கு ஆகியவற்றின் நுகர்வு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் அதனை கொள்வனவு செய்வதை குறைத்துக் கொண்டுள்ளதாக அவர் கூறினார். இதன்காரணமாக மரக்கறிகளின் விலைகள் சடுதியாக குறைவடைந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். ⏰ யாழில் இருந்து உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேர சேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.! […]

ஜனாதிபதி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிகழ்த்திய உரையின் முழு வடிவம்

நாட்டில் கல்வி நடவடிக்கைகளின் அபிவிருத்திக்காக புதிய தொழில்நுட்பம் மூலம், மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து, தமது கொள்கை விளக்க உரையை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மின்சாரம் தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் போது மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என சுட்டிக்காட்டினார். அத்துடன், தமது […]