IMF உடனான ஒப்பந்தத்தை அரசு முழுமையாக நிராகரிக்காது

உலகளாவிய நிதி நிறுவனமான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிதி உதவியை அரசாங்கம் என்றென் றும் நிராகரிக்காது. ஆனால் தற்போது இலங்கை தனது கடன் சேவையை வேறு முறையின் கீழ் மறுசீரமைக்க எதிர்பார்க்கிறது என வெகுஜன ஊடக அமைச்சரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் நெருங்கிய உறவைப் பேணுகிறது என்றும் அவர் தெரிவித்தார். 1950 ஆம் ஆண்டு முதல் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை 16 தடவைகள் பெற்றுள்ளது. சமீப காலங்களில், […]
எரிபொருள் விலை உயர்வை தவிர்க்க முடியாது – ஒரு லீற்றர் டீசலால் 30 ரூபா நட்டம்

நாட்டில் விற்பனை செய்யப்படும் டீசல் லீற்றர் ஒன்றினால் 30 ரூபா நட்டம் ஏற்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 89 டொலராக உயர்ந்துள்ளது. இது ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவு என்று அமைச்சர் கூறினார். இலங்கையின் மாதாந்த ஏற்றுமதி வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை மாதம் 500 மில்லியன் டொலரை செலவிடுகிறது. இதன்படி, நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு ஒட்டுமொத்த […]
டிசம்பரில் பணவீக்கம் 14% ஆக அதிகரிப்பு!

நவம்பரில் 11.1%ஆக இருந்த பணவீக்கமானது டிசம்பரில் 14% ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உணவு மற்றும் உணவு அல்லாத வகை பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதேவேளை உணவுப் பணவீக்கமானது நவம்பரில் 16.9% ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 21.5% ஆக அதிகரித்துள்ளது. மேலும் உணவு அல்லாத பண வீக்கமானது நவம்பரில் 6.2% ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 7.6% ஆக அதிகரித்துள்ளது. உணவு வகைகளில், காய்கறிகள், […]
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு வருடங்கள் நீடிப்பு?

ஜனாதிபதி மற்றும் தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் இரண்டு வருடங்கள் நீடிக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரான டயானா கமகே தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கொவிட் -19 நெருக்கடியால் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தால் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை. எனவே ஜனாதிபதி மற்றும் தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். தற்போதைய அரசாங்கம் நாட்டில் அதிவேக […]
குவைத் எயார்வேஸின் இலங்கைக்கான விமான சேவை இடைநிறுத்தம்

குவைத் எயார்வேஸ் இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது. வருமானத்தை விட இலங்கைக்கு வருவதற்கான செலவு அதிகம் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2021 இல் தேயிலை உற்பத்தி 7.35 சதவீதத்தால் அதிகரிப்பு

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் கடந்த வருடம் தேயிலை தொழிற்துறை உயர்வடைந்துள்ளதாக அதன் தரகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளின் வருமானம் இவ்வாறு உயர்வடைந்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டைக்காட்டிலும், கடந்த வருடம் 7.35 சதவீதத்தால் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன்படி, 299.34 மில்லியன் கிலோகிராம் தேயிலை கடந்த வருடத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், கடந்த வருடத்தில் 286.2 மில்லியன் கிலோகிராம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதோடு, அது 2020ஆம் ஆண்டை காட்டிலும் 20.4 மில்லியன் கிலோகிராம் […]
5 ரூபா அதிகரிப்பு போதுமானதல்ல – பால் உற்பத்தியாளர்கள் சங்கம்

ஒரு லீற்றர் பசும்பாலுக்காக ஐந்து ரூபா விலை அதிகரிப்பு போதுமானது அல்லவென பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது, ஒருலீற்றர் பசும்பால் 85 முதல் 90 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுகின்றது. இந்தநிலையில், ஒரு லீற்றர் பசும்பாலுக்காக குறைந்தது 150 ரூபாவாவேனும் வழங்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரியுள்ளது. ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக […]