மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாளை (24) ஒரு மணி நேரமும், நாளை மறுதினம் முதல் சுமார் 2 மணி நேரமும் மின் துண்டிப்பு மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஏற்பட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். இன்று (23) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாளை (24) முதல் ஒரு மணி நேரம் மின்வெட்டு […]

4 மணித்தியாலம் மின் துண்டிப்பு – இலங்கை மின்சார சபை

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஏற்பட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். இன்று (23) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாளை (24) முதல் ஒரு மணி நேரம் மின்வெட்டு இருந்தாலும், அதனை மேலும் இரண்டு மணி நேரமாக நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆனால் அடுத்த வெள்ளிக்கிழமை வரை மட்டுமே இந்த செயன்முறையை தொடர முடியும் என்று அவர் மேலும் […]

கனடாவில் காணாமல் போன தமிழ் இளைஞர் மற்றும் யுவதி. அதிர்ச்சி தகவல்!!

கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவரும், யுவதி ஒருவரும் காணாமல் போயிருந்த நிலையில், இளைஞர் அகால மரணமடைந்துள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவத்தில் யோசாந்த் ஜெகதீஸ்வரன் (29) என்ற இளைஞனும், பிரசாந்தி அருச்சுனன் (28) என்ற யுவதியுமே காணாமல் போயிருந்தனர். இதனையடுத்து அவர்களை கண்டுபிடிக்க ரொறன்ரோ பொலிஸ் சேவை பொதுமக்களின் உதவியைக் கோரியிருந்த நிலையில் இருவரும் ஒன்றாக இருக்கலாமென கனடா பொலிசார் கூறியிருந்தனர். யோசாந்த் கடைசியாக ஜனவரி 15, 2022 அன்று மதியம் 12:10 மணியளவில் […]

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு மேலும் 1500 மில்லியன் அமெரிக்க டொலர்?

அரசாங்கம் அண்மையில் பெற்ற கடன்கள் மற்றும் சலுகைகளுக்கு மேலதிகமாக மேலும் 1500 மில்லியன் அமெரிக்க டொலரை இந்தியாவிடமிருந்து பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சரான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடியதன் பின்னர் இலங்கைக்கு பாரிய உதவித் தொகை கிடைத்துள்ள தாகவும் அவர் தெரிவித்தார். தேவையான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் சீமெந்து ஆகியவற்றைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் […]

இலங்கையில் வட்டி வீதம் அதிகரிப்பு

கொள்கை வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை தீர்மானித்துள்ளது. 50 புள்ளிகளால் கொள்ளை வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நிலையான வைப்புக்கான வட்டி 5.5 வீதமாகவும் நிலையான கடனுக்குரிய வட்டி 6.5 வீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடனுக்கான நிலையான வட்டி வீதம் அதிகரிக்கப்படுவதுடன், வங்கிகளின் வட்டி வீதம் 9.5 வீதமாக காணப்படுகின்றது. ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் […]

சீனாவிடமிருந்து அத்தியாவசிய பொருட்கள்

சீனாவின் நிவாரண உதவியின் கீழ், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் கலந்துரையாடல் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வர்த்தக அமைச்சும், நிதி அமைச்சும் இணைந்து, தற்போது முன்னுரிமை வழங்க வேண்டிய பொருட்கள் மற்றும் சேவைகளை அடையாளம் கண்டு, அவற்றை சீன அரசாங்கத்திடம் இருந்து நிவாரணமாக பெற்றுக்கொள்வதே இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் […]

மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை100 டொலராக உயரும் சாத்தியம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலராக அதிக்கும் சாத்தியம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஏழு வருடங்களில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு உலக சந்தையில் உச்சத்தை எட்டியுள்ள மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, விரைவில் 100 டொலரை தாண்டக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 2014ஆம் ஆண்டு செப்ரெம்பர் முதல் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலரை எட்டவில்லை. எவ்வாறாயினும், இந்தஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு பீப்பாய் பிரென்ட் […]