உலக சந்தையில் அதிகரித்துவரும் தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் உயரும் போக்கு காணப்படுவதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வார இறுதியில் சிறியளவை சரிவைக் கண்டிருந்த நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,835 டொலரை எட்டியுள்ளது. இருப்பினும், அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1900 டொலர் முதல் 1910 டொலர் வரை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் […]
தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் 5, 000 ரூபா!

அரச பணியாளர்களுக்காக வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள, 5,000 மாதாந்த மேலதிக கொடுப்பனவை, அரசின் வசமுள்ள நிறுவனங்களினது ஊழியர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் இந்த மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிருபம் திறைசேரி செயலாளரால் தற்போது அனுப்பப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் வழங்கப்படவுள்ள இந்த 5,000 ரூபா கொடுப்பனவை அரச அனுசரனையுடன் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் வழங்குவது தொடர்பான தீர்மானத்தை அதன் பணிப்பாளர் சபை மேற்கொள்ளும். அது தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், […]
விவசாயிகளுக்கு அராசாங்கம் வழங்கவுள்ள உதவி

நெல் பயிரிட முடியாத நிலங்களில், இடைப்போகத்தில் மேலதிகப் பயிராக பயறு, பயிர்ச் செய்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் செயற்பாடுகளை கண்காணித்த போது கிடைத்த தகவல்களைக் கருத்திற்கொண்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நீர்ப்பாசன வசதிகள் இன்மையால், சிறுபோகத்தில் நெல் பயிரிட முடியாத நிலங்களில் இடைப் போகத்தின் மேலதிக பயிராகப் பயறை பயிரிடுவதற்கு அவசியமான விதைகளைப் பெற்றுக்கொள்வதற்கு விவசாயிகளுக்கு நிதியுதவிகளை வழங்குமாறும் ஜனாதிபதி, […]
இலங்கை தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்த நாடாக ஈராக்

கடந்த ஆண்டு இலங்கையின் தேயிலை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட நாடாக ஈராக் பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் முதலிடத்தில் இருந்த துருக்கி, இரண்டாம் இடத்தில் பதிவாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு ஈராக் 27 சதவீதமான தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்துள்ளது. அதேநேரம், துருக்கியின் தேயிலை இறக்குமதி குறித்த காலத்தில் 23.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேயிலை தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் […]
கொழும்பு துறைமுக நகரில் புகைப்படம் எடுக்க கட்டணம்?

கொழும்பு துறைமுக நகரில் ‘செல்ஃபி’ எனப்படும் தாமி படம் எடுப்பதற்கும், தனிப்பட்ட காணொளிகளைப் பதிவு செய்வதற்கும் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என கொழும்புத் துறைமுக நகர் திட்ட நிறுவனம் அறிவித்துள்ளது. தாமி படங்களை எடுப்பதற்கும், காணொளிகளைப் பதிவு செய்வதற்குக் கொழும்புத் துறைமுக நிறுவனம் கட்டணம் அறவிடுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது என அந்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் கொழும்புத் துறைமுக நகர பகுதியில், விழாக்கள் மற்றும் வணிக […]
எரிபொருளை இந்தியாவிடமிருந்து நேரடியாகப் பெற அவதானம்

இலங்கையின் மின்னுற்பத்திக்கு அவசியமான எரிபொருளை இந்திய கடனுதவியின் கீழ், நேரடியாகப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய அரசாங்கத்தினால், அண்மையில் இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கப்பட்டது. அதனை இந்தியாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கையின் மின்னுற்பத்தி நிலையங்களை செயற்படுத்துவதற்காக, மாதமொன்றுக்கு அவசியமான 30 மில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருளை, பிரத்தியேக கட்டளையின் மூலம் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் […]
இலங்கை கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவ படகுகள் ஏலத்திற்கு

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 105 படகுகளை, எதிர்காலத்தில் ஏலமிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதிவரை 5 இடங்களில் குறித்த படகுகள் ஏலமிடப்படவுள்ளன. காரைநகரில் 65 படகுகளும், காங்கேசன்துறையில் 5 படகுகளும், கிராஞ்சியில் 24 படகுகளும், தலைமன்னாரில் 9 படகுகளும், கற்பிட்டியில் 2 படகுகளும் ஏலமிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக […]