மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கிச் செல்லும் யாழ். மாவட்டம்

அனைத்து செயற்பாடுகளும் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்ட சுகாதார மேம்பாட்டு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது கொரோனா, டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவலை தடுப்பது பற்றியும் […]
இலங்கையின் பொருளாதார நிலைமை எவ்வளவு மோசமானதாக உள்ளது?

பதில்- எங்கள் முன்னாள் இரண்டு சவால்கள் உள்ளன முதலாவது அந்நியசெலாவணி நெருக்கடி அது தற்போது பாதிப்பை ஏற்படுத்திவருகின்றது- இரண்டாவது நிதிசார்ந்த சவால் – இது எங்களின் சக்தி அப்பால் நாங்கள் வாழ்ந்ததால் சுதந்திரத்தின் பின்னர் சுவீகரிக்கப்பட்ட பாரம்பரியம். பெருந்தொற்று இதனை முன்னணிக்கு கொண்டுவந்துள்ளது. அமெரிக்க வர்த்தக ஜாம்பவானும் முதலீட்டாளருமான வரென்பவட் அலை குறையும்போது யார்நிர்வாணமாக நீந்துகின்றார்கள் என்பது தெரியவரும் என தெரிவித்துள்ளார்-பெருந்தொற்று உண்மையான அலையை உருவாக்கியுள்ளது என நான் கருதுகின்றேன். இது நாங்கள் எதிர்கொள்ளும் உண்மையான சவால். […]
1 மில்லியன் தொன் அரிசியை வழங்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கையை சீனா நிராகரிப்பு?

சீனா இலங்கைக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கவுள்ளது எனும் இலங்கை அரசாங்கத்தின் கூற்றை சீனா மறுத்துள்ளது. ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்த சீன இராஜதந்திரி ஒருவர், இலங்கையினால் இவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் சீனா அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப் பட்டுள்ள இறப்பர் -அரிசி ஒப்பந்தத்தின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அரிசிக் கையிருப்பு பெறப்படுவதாக […]
யூரியா உள்ளிட்ட உரங்கள் அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு வரவுள்ளன!

12,000 முதல் 15,000 மெட்றிக் டொன் யூரியா உள்ளிட்ட இரசாயன உரங்கள், அடுத்த சில வாரங்களில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட உள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. இரசாயன உர இறக்குமதித் தடை நீக்கப்பட்டதன் பின்னர், கடந்த சில தினங்களில் 1,500 மெட்றிக் டன் யூரியா உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய உர செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் கசுன் மஹதன்தில தெரிவித்துள்ளார். இந்நிலையில், எஞ்சிய இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கான கட்டளைகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதற்கமைய, குறித்த இரசாயன […]
யாழ் சர்வதேச வர்த்தக சந்தையின் இரண்டாம் நாள்

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை 12ஆவது தடவையாக இன்றையதினம் காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் சம்பிரதாயபூர்வமாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் ஹார்ன்போல் மற்றும் தொழில்சார் பிரதிநிதிகளால் திறந்துவைக்கப்பட்டது. இந்த வர்த்தக சந்தை எதிர்வரும் 23ம் திகதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இடம்பெறவுள்ளது. சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சியாளர்கள் தங்கள் உற்பத்திகளை வடக்கு மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான களமாக இந்தக் கண்காட்சி […]
யாழ் சர்வதேச வர்த்தகக் சந்தையை எதிர்க்கும் உள்ளூர் உற்பத்தியாளர்கள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் சிறு கைத் தொழில் முயற்சியாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, உள்ளூர் முயற்சியாளார்கள் கவலை தெரிவித்துள்ளனர். யாழில் தொடர்ச்சியாக 3 நாட்கள் சர்வதேச வர்த்தக சந்தையும், கண்காட்சியும் இடம்பெற்று வருகிறது. இந்த கண்காட்சியில், தெற்கில் உள்ள, நிறுவனங்கள் பலவற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதை விடுத்து நிதி நிறுவனங்கள், மற்றும் பாரிய உற்பத்திகள் மேற்கொள்வோரை அறிமுகபடுத்தும் நிகழ்வாகவே இது அமைகிறது. இதனால் உற்பத்திகளை மேற்கொள்ளும் உள்ளூர் வாசிகள், சந்தை படுத்துவதற்கான வாய்ப்பின்றி […]
2022 யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியின் இறுதி நாள் இன்று

யாழ்ப்பாணம், சர்வதேச வர்த்தக கண்காட்சியின் இறுதி நாள் இன்றாகும். யாழ் முற்றவெளி மைதானத்தில் கண்காட்சி நேற்று முன்தினம் (21) ஆரம்பமானது. கண்காட்சியின் இரண்டாவது நாளான நேற்று (22) கண்காட்சியை ,வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆரம்பித்து வைத்தார் யாழ்ப்பாணம் முற்றவெளியில கண்காட்சி இன்று இரவு எட்டு மணியளவில் நிறைவடையும். யாழ்ப்பாணம், கண்காட்சி இம்முறை 12 ஆவது தடவையாகவும் இடம்பெறுகிறது. வர்த்தக மன்றம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு,யாழ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், யாழ் இந்திய உதவித் […]