உள்நாட்டு தேங்காய் எண்ணெய்யும் சுத்திகரிக்கப்படுவது கட்டாயமாக்கப்படும்

எதிர்வரும் காலங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய்யும் சுத்திகரிக்கப்படுவது கட்டாயமாக்கப்படும் என தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. சிலர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் போலியான விடயங்களை முன்வைத்தமையால் சந்தையில் தேங்காய் எண்ணெய்க்கான தட்டுப்பாடு ஏற்படுவதாக தெங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் கீர்த்தி வீரசிங்க தெரிவித்தார். அத்துடன் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிகாட்டினார். தற்போது சந்தையில் ஒரு போத்தல் தேங்காய் எண்ணெய் 700 ரூபாவரையில் அதிகரித்துள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் தேங்காய் […]

வாழ்க்கை செலவு வேகமாக அதிகரிப்பு

அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) அறிவித்து ஒரு மாதம் செல்லும் முன்னர் வாழ்க்கை செலவு பாரியளவில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் இறுதியில் 12.1 வீதமாக அதிகரித்து காணப்பட்ட பண வீக்கமானது டிசம்பர் மாத இறுதியில் 14 வீதமாக மேலும் அதிகரித்தது. பணவீக்கத்தை அளவிடும் பொருட்கள், சேவை மற்றும் உணவுகளின் விலைகள் மிக வேகமாக அதிகரித்து வருவதே இங்கு முக்கியமானது. […]

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.40 பில்லியன் நிதி ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

கடந்தாண்டு பெரும் போகத்தில் சேதமடைந்த பயிர் களுக்காக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் 40 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக விவசாயிகளிட மிருந்து இன்று முதல் ஒரு கிலோகிராம் நெல்லை 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பெரும் போகத்தில் நெல் அறுவடை குறையும் பட்சத் தில், விவசாயிகளுக்கு […]

யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பசுமை விவசாயத்திற்கு இராணுவம் துணை நிற்கும்!

யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பசுமை விவசாயத்திற்கு இராணுவம் தங்களால் ஆன உதவிகளை வழங்குவதோடு பென்றோம் துணை நிற்கும் என யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ஜெனரல் டி ஜிஎஸ் செனரத் யாப்பா தெரிவித்தார். நேற்றைய தினம் திங்கட்கிழமை திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாய திணைக்களத்தில் இடம்பெற்ற பசுமை விவசாயத்தை ஆரம்பிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டின் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் இராணுவ தளபதி சவேந்திர […]

மஹிந்தவின் கையொப்பத்தை போலியாக இட்டு ஏ.ரி.எம் அட்டையில் பாரிய மோசடி

முன்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய உதித லொக்கு பண்டார சுமார் 30 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்செய்தியை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட் டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் சம்பளக் கணக்கில் இருந்து பணம் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மிகவும் சூட்சுமமான முறையில் அவ்வப்போது பணம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னரும் உதித லொக்கு பண்டார […]

எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும்

கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக உலக எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. விநியோகம் தடைப்படும் அபாயம் காரணமாக ஒரு பீப்பாய் பிரண்ட் மசகு எண்ணெய்யின் விலை 86 டொலர் 75 சதமாக உயர்ந்துள்ளது. அமெரிக்க WTI ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 83 டொலர் 65 சதமாக உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் தேவை காரணமாக உலக மசகு எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ⏰ […]

மஹிந்தவின் வங்கிக் கணக்கை சூறையாடிய சபாநாயகாின் மகன்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணிக்குழாம் பிரதானியாக கடமையாற்றிய உதித் லொக்குபண்டாரவிடம் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான வங்கிக் கணக்கிலிருந்து 35 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை உதித் லொகு பண்டார மோசடி செய்துள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதமரின் நெருங்கிய உறவினர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், அது குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரதமர் […]