சீன இறக்குமதி அரிசியை சாப்பிட்டால் சிறுநீரக நோய் ஏற்படும்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொண்டால் இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். சீனா தனது பயிர்ச்செய்கைக்கு அதிகளவில் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதாகவும் இலங்கையை விட மூன்று நான்கு மடங்கு இரசாயன உரங்களை சீனா பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார். தற்போதைய அரசாங்கத்தினால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், உரத்தை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் இன்று செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் […]
சுற்றுலாப்பயணிகளிடமிருந்து டொலர் வடிவில் கட்டணத்தை அறவிட தீர்மானம்

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கான ஹோட்டல் சேவை வழங்குனர்கள் அதற்குரிய கட்டணத்தை சுற்றுலாப்பயணிகளிடமிருந்து டொலர் வடிவில் மாத்திரம் அறவிடுவதைக் கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் நாணயச்சபையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகக் கடந்த 21 ஆம் திகமி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவித்தலின் பிரகாரம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்கீழ் பதிவுசெய்யப்பட்டிருப்பதுடன் அதற்கான அனுமதிப்பத்திரத்தையும் கொண்டிருக்கக்கூடிய ஹோட்டல் சேவை வழங்குனர்கள், வெளிநாடுகளிலிருந்து வருகைதரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஹோட்டல் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை வழங்கும்போது அதற்கான கட்டணத்தை டொலர் […]
பிரதமரின் வங்கிக் கணக்கிலிருந்து 6 வருடங்களாக மாயமான 4 கோடி ரூபா

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான அரச வங்கியொன்றிலிருந்த வங்கிக்கணக்கொன்றிலிருந்து சுமார் 4 கோடி ரூபா பணம், பிரதமருக்கு மிக நெருக்கமான ஒருவர் ஊடாக கடந்த 6 வருடங்களில் அவ்வப்போது மோசடியாக பெறப்பட்டுள்ளமை தொடர்பில் சிறப்பு விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. அவ்வாறு விஷேட விசாரணை ஒன்றினை நடாத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக அரசின் நம்பகரமான தகவல் வட்டாரங்கள் வெளிப்படுத்தின. எவ்வாறாயினும் நேற்று மாலையாகும் போதும் அது குறித்த அதிகாரபூர்வ தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கவில்லை. பிரதமரின் குறித்த வங்கிக் கணக்கின் […]
ஊழல் மதிப்பாய்வு சுட்டியில் இலங்கை 102 ஆவது இடம்

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) சர்வதேச நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியில் இலங்கை 102 ஆவது இடத்தை பிடித்துள்ளது. CPI2021_Map_Twitter EN ஒரு தசாப்தகாலமாக ஊழல் நிலையில் எவ்வித முன்னேற்றகரமான மாற்றங்களையும் அடையிவில்லை என்பதை 2021 ஆம் ஆண்டிற்கான ஊழல் மதிப்பாய்வுச் சுட்டி வெளிப்படுத்துகின்றது ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) சர்வதேச நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட சமீபத்திய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியானது (CPI) (CORRUPTION PERCEPTIONS INDEX) இன்று வெளியிடப்பட்டது. CPI ஆனது, உலகெங்கிலுமுள்ள 180 […]
இறக்குமதி அரிசி சேதன பசளையில் உற்பத்தி செய்யப்பட்டதா என்பதற்கு உத்தரவாதமளிக்க முடியாது.

சீனாவில் இருந்து 1 மில்லியன் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளமை குறித்து இதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. இறக்குமதி செய்யப்படும் அரிசி சேதன பசளையில் உற்பத்தி செய்யப்பட்டதா என்பதற்கு உத்தரவாதமளிக்க முடியாது என அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பல்வேறு பொதுகாரணிகளை அடிப்படையாகக் கொண்டு அரிசி இறக்குமதிக்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.சீனாவில் […]
நெல்லினை 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய நடவடிக்கை

நெல் விவசாயிகளின் அறுவடைக்கு நியாயமான விலையைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அரசாங்கம் நெல் இருப்பை பாதுகாப்பாக பேணுவதையும் நோக்காகக் கொண்டு பெரும் போகத்தில் அரசாங்க நெல் கொள்வனவு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை ஊடாக ஒரு கிலோ நெல்லினை தலா 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். குறித்த நெல் அறுவடையை கொள்வனவு செய்தல், நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக நேரடியாகவும் மாவட்டச் […]
ஈர வலயத்தில் அறுவடை வீழ்ச்சி

பெரும்போக அறுவடை குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஈர வலயத்தில் இம்முறை அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. வறண்ட வலயத்தில் சில பகுதியில் 10 தொடக்கம் 25 வீத அறுவடை வீழ்ச்சியடைந்திருக்கக்கூடும் என தாம் எதிர்பார்ப்பதாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா குறிப்பிட்டார். இதேவேளை, சிறுபோகத்திற்கு தேவையான உரம் தொடர்பான பரிந்துரைகளை உர செயலகத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக அவர் கூறினார். அதற்கமைய, ஒரு ஹெக்டேருக்கு 50 கிலோகிராம் என்ற அடிப்படையில், […]