இலங்கையர்களுக்கான தென்கொரிய வேலைவாய்ப்பு அதிகரிப்பு

தென் கொரிய நாட்டில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்புப் கிடைப்பதன் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பணியகம் குறிப்பிடுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காணப்பட்டமையினால், வெளிநாட்டவர்களை தங்களது நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்திருந்ததது. இதனால் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருந்த பலரின் கனவும் கலைந்திருந்தது. எனினும், கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் விட்டப்பாடில்லை. இருந்தாலும், தடுப்பூசிகளை ஏற்றி, சுகாதார வழிமுறைகளின்படி குறிப்பிட்ட சில நாடுகள் வெளிநாட்டவர்களுக்கு அண்மைக்காலமாக தொழில்வாய்ப்பை வழங்கி வருகிறது. இதன்படி […]

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (27.01.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும் 🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் […]

இலங்கையின் உற்பத்தித் துறை மேம்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க பிரான்ஸ் தயார்

இலங்கையின் உற்பத்தித் துறை மேம்பாட்டுக்கு, அவசியமான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பு வழங்க பிரான்ஸ் தயாரென, இலங்கைக்கான அந்த நாட்டு தூதுவர் எரிக் லவெர்டு தெரிவித்துள்ளார். இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிலையத்திற்கு அண்மையில் மேற்கொண்ட கண்காணிப்பு பயணத்தின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இலங்கையின் சிறுதோட்ட இறப்பர் தொழிலாளர்களின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான திட்டம் குறித்து ஆராய்வதற்காக அவர் இந்தக் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் […]

மேலும் 2 இலட்சம் சீமெந்து மூட்டைகள் நாளை இலங்கைக்கு

2 இலட்சம் சீமெந்து மூடைகளைத் தாங்கிய மற்றுமொரு கப்பல் நாளைய தினம் நாட்டை வந்தடைய உள்ளதாக, சீமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 6 இலட்சம் சீமெந்து மூடைகளைத் தாங்கிய இரண்டு கப்பல்கள் கடந்த வாரம் நாட்டை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், சந்தையில் அதிகரித்துள்ள கேள்வி காரணமாக, சில பகுதிகளில் சீமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மத்திய அதிவேக நெடுஞ்சாலை, துறைமுக நகர் மற்றும் நகர வீடமைப்புத் திட்ட நிர்மாணம் உள்ளிட்ட ஏனைய தனியார்த் துறை […]

இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குகிறது இந்தியா

எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க இந்தியா அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் நிதி விரைவில் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் காணப்படும் எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்காக இந்த கடனுதவியை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், எதிர்காலத்தில் இந்தியாவில் இருந்து நேரடியாக மின்சாரத்தை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக […]

இலங்கைவரும் வெளிநாட்டவர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல் வெளியானது!

கொவிட் பரவலுக்கு மத்தியில் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி, கொவிட் நோய்க்கு எதிரான ஒரு தடுப்பூசியைப் பெற்ற, கடந்த ஆறு மாதங்களில் கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் உட்பட இலங்கைவரும் அனைத்து வெளிநாட்டவர்களும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களாக கருதப்படுகிறது. மேலும், நாட்டிற்கு வந்தவுடன் விமான நிலையத்தில் நடத்தப்படும் PCR பரிசோதனையின்போது 30க்கும் குறைவான CT பரிசோதனை முடிவுகளைக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் […]

அதிக விலைக்கு சீமெந்தை விற்பனை செய்த நபர் கைது!

ராகம கடவத்த வீதிப் பகுதியில் அனுமதிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்தை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 65 சீமெந்து மூடைகளுடன் சந்தேக நபர் கைது செய்யப் பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பஹலகரகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நபர் கம்பஹா நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரிலேயே […]