வரி தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைக்க அனுமதி

இரண்டாயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக வரி அறவிடக்கூடிய வருமானத்தை ஈட்டும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஒரு தடவை மாத்திரம் அறிவிடப்படும் 25 சதவீதம் வரி தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இது தொடர்பான யோசனை இந்த ஆண்டுக்கான பாதீட்டில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது. இந்நிலையில் குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்ற அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிப்பதற்கும் நிதி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை […]

சிதைவுகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்

கடலில் தீக்கிரையாகிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கழிவுகள் மற்றும் அழிவடைந்த பகுதிகளை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 120 நாட்களில் குறித்த பணிகளை நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கழிவுகளை அகற்றும் செயன்முறையால் தொடர்ந்தும் கடல் மாசடையாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக குறித்த செயன்முறையை கண்காணிப்பதற்காக வர்த்தகக் கப்பல்கள் செயலகத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் ஏற்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய கண்காணிப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கையிலிருந்து 260 மில்லியன் டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய வர்த்தகர்

நாட்டில் டொலர் தட்டுப்பாடு காணப்படும் நிலையில், பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 260 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய இரண்டு வர்த்தகர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் நேற்று (31) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் அறிக்கையொன்றை சமர்பித்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார். மேற்படி வர்த்தகர்கள் இருவரும் வெளிநாட்டிலிருந்து பேரிச்சம்பழம் மற்றும் தங்க ஆபரணங்களை இறக்குமதி செய்வதாகக் கூறி டொலர்களை அனுப்பியதாக குற்றப் புலனாய்வுப் […]

பெற்றோலின் தரம் தொடர்பில் சோதனை முன்னெடுப்பு

95 ஒக்டேன் மற்றும் 92 ஒக்டேன் பெற்றோலின் கலவையில் மாற்றம் உள்ளதா என்பதை கண்டறிய அதிகாரிகள் சோதனைகளை முன்னெடுத்துள்ளனர். எரிபொருள் நுகர்வு தொடர்பில் பொது மக்கள் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக எரிசக்தி அமைச்சின் செயலாளரான கே.டி.ஆர்.ஒல்கா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அமைந்துள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து 62 மாதிரிகள் பெறப்பட்ட தாகவும், எரிபொருள் தேவையான தரத்தை பூர்த்தி செய்ததை சோதனைகள் உறுதிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், அதிகரித்து வரும் பொதுமக்களின் […]

வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களை ஒன்றிணைக்கும் முதன்மைத் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது

வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களை ஒன்றிணைக்கும் முதன்மைத் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர் நாட்டில் இருந்து 🇱🇰இலங்கையில் உள்ள உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி  hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும் 🛒 […]

தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

உர நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கை தேயிலை உற்பத்தி கடந்த வருடத்தில் 9.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இதன்படி, கடந்த வருடத்தில் 305 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு 279 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. சர்வதேச நாடுகளில் சிலோன் டி நாமத்திற்கு உள்ள மதிப்பை தொடர்ந்தும் பேணுவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். […]

நவம்பர் மாதம் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு

கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்றுமதி மூலம் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில், வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே காலப்பகுதியில் ஏற்றுமதிக்கான செலவீனங்களும் அதிகரித்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெறப்பட்ட துண்டு விழும் தொகை குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர் நாட்டில் இருந்து இலங்கையில் உள்ள உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி  hi2world.com […]