மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு ; ஒரு பீப்பாய் 91 டொலர்

உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை எதிர்பாராதவிதமாக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 81 முதல் 83 அமெரிக்க டொலர் வரை இருந்தது. ஆனால் தற்போது ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 91 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை இந்த மாதத்துக்குள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விலை உயர்ந்தே இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் […]
இன்றைய (01.02.2022) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (01.02.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 24மணி நேரத்துக்குள் 🇱🇰இலங்கையில் உள்ள உங்கள் உறவுகளின் வீட்டுவாசலில் அத்தியவசிய பொருட்கள் கொடுக்க நாங்க ரெடி! hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் […]
நாட்டின் பல பாகங்களில் திடீர் மின் தடை!

நாட்டின் பல பாகங்களில் தற்போது மின் தடை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி இன்று மீண்டும் பழுதடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது. கடந்த டிசம்பர் முதல் செயலிழந்திருந்த குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு, நேற்றைய தினம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டது. இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மேற்படி மின் பிறப்பாக்கி இன்று மீண்டும் செயலிழந்துள்ளது. இதனால் தேசிய மின் கட்டமைப்பில் […]
கள்ளச்சந்தையில் பெற்ற டொலர்களை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்தோம்

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தீவிரமாக இடம்பெற்ற காலப்பகுதியில் கள்ளச்சந்தை மூலம் பெறப்பட்ட பணத்தை பயன்படுத்தி இலங்கை வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்தது என நிதியமைச்சர் தெரிவித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சண்டே திவயினவிற்கு வழங்கிய பேட்டியில் நிதியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார் கள்ளச்சந்தையில் பெறப்பட்ட பணத்தை பயன்படுத்தி இலங்கை வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை பெற்றது என அவர் குறி;ப்பிட்டுள்ளார். அக்காலப்பகுதியில் எரிபொருள் கொள்வனவிற்கு செலுத்துவதற்காக கள்ளச்சந்தையில் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் பெற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை எரிபொருள் […]
இவ்வாண்டு ஜனவரியில் 82,327 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை!

இந்த வருடத்தின் முதல் மாதத்தில் 82,327 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சரான பிரசன்ன ரணதுங்க இன்று தெரிவித்துள்ளார். ஜனவரி 1 முதல் 31 வரை நாளாந்தம் 2000 முதல் 3000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அதிகபட்சமாக ஜனவரி 5ஆம் திகதி வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3,371 ஆகும். ஜனவரி மாதத்தில் ரஷ்யாவிலிருந்து 13,478 சுற்றுலாப் பயணிகளும் , இந்தியாவிலிருந்து 11,751 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர். உக்ரைனில் இருந்து […]
மற்றுமொரு மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளும் பாதிப்பு

கொழும்பு துறைமுகத்தில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்திற்கான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நேற்று (31) பிற்பகல் முதல் அதன் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தேசிய மின்கட்டமைப்பில் 60 மெகாவோட் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேற்படி மின்முனையத்திற்கு தேவையான 500 மெற்றிக் டன் எரிபொருள் வழங்கப்படும் என சக்திவலு அமைச்சு அறிவித்துள்ளது. இன்றைய தினம் குறித்த எரிபொருள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் கொழும்பு துறைமுகத்தில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நுரைச்சோலை மின்னுற்பத்தி […]
முதன்மைப் பணவீக்கம் அதிகரிப்பு – மத்திய வங்கி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் முதன்மைப் பணவீக்கமானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 12.1 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் 14.2 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது அத்துடன் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6.9 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்பினால் பணவீக்கம் தூண்டப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதற்கமைய உணவுப் பணவீக்கம், […]