இலங்கையிலிருந்து வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற இருவர் கைது

11 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை டுபாய்க்கு கடத்த முயன்ற இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி சந்தேக நபர்கள் டுபாய் நோக்கி பயணிப்பதற்காக இன்று (02) அதிகாலை 2.55 மணியளவில் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அவர்களின் பயணப் பொதிகளை பரிசோதித்த சுங்க அதிகாரிகள், 46,000 யூரோ பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கைப்பற்றியதாக சுங்கப் பேச்சாளரும், பிரதி சுங்கப் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்தார். சந்தேகநபர்கள் கொழும்பு […]

பிரத்தியேக வகுப்புகளுக்கு நேற்று நள்ளிரவு முதல் தடை

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை இலக்காகக் கொண்ட பிரத்தியேக வகுப்புகளுக்கு நேற்று (01) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அதற்கமைய, துறை சார் விரிவுரையாளர்கள், கருத்தரங்குகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளை நடத்துதல், பரீட்சையை இலக்காகக் கொண்ட வினாத்தாள்களை அச்சிடுதல், அவற்றை பகிர்ந்தளித்தல், இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு தடை […]

மதுபானசாலைகள் – இறைச்சி கடைகளுக்கு பூட்டு

74 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன. உள்விவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை மறுதினம் (04) குறித்த வர்த்தக நிலையங்கள் மூடப்படவுள்ளன. இதேவேளை, 74 ஆவது சுதந்திர தின விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி […]

நாடு முடக்கத்திற்கு தயாராகிறது

தற்போதைய கொவிட் பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண்டிய சூழ்நிலைக்கும் இட்டுச் செல்ல வாய்ப்புள்ளது என அரச மருத்து அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அதன் மத்தியக் குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கொவிட் கட்டுப்பாட்டுக்கு அரசாங்கமும் பொறுப்புடைய தரப்பினரும் உடன் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவ்வாறு அல்லாத பட்சத்தில் நாட்டை முடக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படலாம். சுகாதார வழிகாட்டி ஒன்று […]

கள்ளச்சந்தை டொலரை பயன்படுத்தி அரசாங்கம் ஆயுதக்கொள்வனவில்

கள்ளச்சந்தை டொலரை பயன்படுத்தி அரசாங்கம் ஆயுதக்கொள்வனவில் ஈடுபடவில்லை- வெளிவிவகார அமைச்சு கள்ளச்சந்தையில் பெறப்பட்ட டொலரை பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் வடகொரியாவிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்தது என வெளியான தகவல்களை இலங்கை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. நாங்கள் கள்ளச்சந்தையில் பெறப்பட்ட டொலரை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை பெற்றோம் – பசில் என்ற தலைப்பில் செய்தி இணையத்தளமொன்றில் வெளியான தகவல் குறித்து தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நிதியமைச்சருடன் இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்- […]

500 மில்லியன் டொலர் கடன் உடன்படிக்கையில் இந்தியா. இலங்கை கைச்சாத்து!

எரிபொருள் கொள்வனவுக்காக இந்தியா வழங்கும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான இரண்டு நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கை இன்று (02) மாலை கைச்சாத்திடப்படவுள்ளது. எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க அண்மையில் இந்தியா அனுமதி வழங்கியிருந்தது. நாட்டில் காணப்படும் எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்காக இந்த கடனுதவியை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்தது. இதேவேளை, எதிர்காலத்தில் இந்தியாவில் இருந்து நேரடியாக மின்சாரத்தை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

இலங்கை இராணுவத்தின் புதிய தயாரிப்பு!

2020-2025 ஐந்தாண்டு இராணுவத்தின் எதிர்கால திட்டங்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை இராணுத்தின் மின் இயந்திர மற்றும் பொறியியல் படைப் பிரிவினால் புதிய இராணுவ வாகனத்தை தயாரித்துள்ளது. இந்த வாகனம் Mine Resistance Ambush Protected Vehicle என அழைக்கப்படுகிறது. கண்ணி வெடிகளில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இராணுவப் படைப் பிரிவின் படைப்பு மற்றும் உற்பத்தி திறனை வெளிப்படுத்தும் விதமாக இராணுவத்தின் புதிய தயாரிப்பு அமைந்துள்ளது. இராணுவத்தில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு பயன்பாட்டில் […]