இணைந்த சரத்குமார் தேவயானி.

சரத்குமார் மற்றும் தேவயானி இணைந்து நடித்த ’சூரிய வம்சம்’ என்ற திரைப்படம் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான நிலையில் 27 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ஒரே படத்தில் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சித்தார்த் நடிக்க இருக்கும் 40வது திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ’8 தோட்டாக்கள்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் […]

இந்த ஆண்டு இதுவரை ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை!

இவ்வருடம் ஜூலை 15 ஆம் திகதி வரையில் இலங்கைக்கு 10 இலட்சத்து 95 ஆயிரத்து 675 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் (1,095,675) வருகை தந்துள்ளனர். சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரண இதனைத் தெரிவித்தார். அதற்கமைய, இலங்கையில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையில் சுற்றுலாத்துறையின் உச்ச நிலை பதிவான 2018 ஆம் ஆண்டை விடவும் இவ்வருடத்தில் சிறந்த நிலையை அடைய முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். 2021 ஏப்ரல் 21 […]

முச்சக்கரவண்டியில் வந்திறங்கிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி!

அத்துருகிரியவில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் இடம்பெற்ற தொகுதி அமைப்பாளர்களின் விசேட கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முச்சக்கரவண்டியில் வந்திறங்கினார். இது தொடர்பில் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் வினவிய போது, தேர்தல் சட்டங்கள் அமுலில் உள்ளதால் அந்த சட்டங்களுக்கு மதிப்பளித்து அரச வாகனங்களைப் பயன்படுத்தாது முச்சக்கர வண்டியில் வந்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். மேலும், தேர்தல் சட்டங்களை அனைவரும் கடைப்பிடிப்பது நல்ல நடைமுறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் […]

சிறுபான்மை கட்சி தலைவர்களை சந்தித்த செந்தில் தொண்டமான்!

சிறுபான்மை கட்சி தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் குறித்து இதன் போது கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர் அலிசார் மௌலானா,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன், மற்றும் ஸ்ரீதரன் ஆகியோர் […]

இலங்கை, ஜனாதிபதி தேர்தலில் AI தொழில்நுட்பம். 

AKD இணையதளம் (akd.lk), தேசிய மக்கள் சக்தியின் கொள்கை நிலையம் மற்றும் தேர்தல் அவதானிப்பு நிலையம் ஆகியன மெய்நிகர் உண்மை அனுபவத்தின் (virtual reality experience) ஊடாக உத்தியோகபூர்வமாக இன்று (27) பிற்பகல் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. உலகில் ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளரொருவர் தனது கொள்கையை மக்கள் மயப்படுத்துவதற்காக AI ஒத்துழைப்பை பெற்றுக்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அத்துடன், ஆசியாவில் அரசியல் தலைவரொருவர் தனது கொள்கையை முன்வைப்பதற்காக AI தொழினுட்பத்தை பயன்படுத்திய முதல் சந்தர்ப்பமும் இதுவாகும். நாட்டின் பிரஜைகளுக்கு […]

கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

கடவுச்சீட்டுக்கு முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் மாத்திரமே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின், தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாமல் செல்வதைத் தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் பாதுகாப்பான புதிய இணையவழி மூலம் கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கு, நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

ரணில் பகிரங்க அறிவிப்பு – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்கான கட்டுப் பணத்தை ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்துள்ளார். காலியில் இன்று நடைபெற்ற ஒன்றிணைந்து வெல்வோம், காலியில் நாம் பொது கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்தார். அத்தோடு, சவால்களை எதிர்கொள்ள முடியாமல் ஓடும் தலைவன் நான் அல்லன். நெருக்கடியான நேரத்தில் நாட்டை பொறுப்பேற்று, முன்னோக்கிச் சென்றுள்ளதாகவும் வங்குரோத்து நிலையிலிருந்து நாடு தற்போது மீண்டுவருவதுடன், வரிசை யுகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக […]