திடீரென வெளியான அதி விசேட வர்த்தமானி!

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக விஜயதாச ராஜபக்ஷ அந்த அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தமையே இதற்குக் காரணமாகும்.
இந்தியன் 2 படத்தால் நொந்து போயிட்டேன், பிரியா பவானி!

இந்தியன் 2 படம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தாலும் படம் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற காரணத்தால் கடுமையாக விமர்சித்தனர். முதல் பாகம் இன்று வரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு படமாக இருக்கும் நிலையில், அதற்கு எதிர்மறையாக இந்தியன் 2 படம் அமைந்தது என்றே சொல்லவேண்டும். படத்தில் காட்சிகளை தான் ட்ரோல் செய்தார்கள் என்று பார்த்தால் படத்தில் நடித்த நடிகை பிரியா பவானி சங்கரை கடுமையாக ட்ரோல் செய்தனர். ட்ரோல் செய்ய மிகவும் […]
அர்ச்சுனா பிணையில் விடுதலை!

மன்னார் நீதிமன்றுக்கு கைவிலங்குடன் அழைத்துவரப்பட்ட மருத்துவர் அருச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வைத்தியர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை,பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தமை, அரச சேவைக்கு இடையூறு விளைவித்தமை போன்ற குற்றசாட்டுக்களின் அடிப்படையில் வைத்தியர் அருச்சுனா கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று மன்னார் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சற்று முன் அவர் பேஸ்புக்கில் நன்றி தெரிவித்து […]
18 வயதில் திருமணம், பரிதாபமாக உயிரிழந்த யுவதி!

18 வயதுடைய திருமணமான யுவதியொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமையால், பண்வஸ்நுவர, கிரிமெட்டிய கெலினாவல பிரதேசத்தில் நேற்று (31) பதற்றமான சூழல் ஏற்பட்டது. கணவனால் தாக்கப்பட்டே யுவதி உயிரிழந்துள்ளதாகவும் சந்தேகநபரான கணவரை இதுவரை பொலிஸார் கைது செய்யவில்லை எனவும் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர். கிரிமெட்டிய கெலினாவல பிரதேசத்தில் வசித்து வந்த 18 வயதுடைய செனுரி பிரேமதிலக என்ற யுவதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். செனுரியின் கணவரின் தாக்குதலே அவரது மரணத்திற்குக் காரணம் என்று உறவினர்கள் குற்றம் […]
பிக்பாஸில் இருந்து விலகுவதாக அறிவித்த கமல்ஹாசன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை அவரின் எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில், “7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா பணிகள் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை. உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. உங்கள் அன்பையும் […]
அர்ச்சுனாவுக்கு பிணை நிராகரிப்பு!

மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் மகபேற்று வைத்தியர் அறைக்குள் நுழைந்து புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனாவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் திங்கட்கிழமை (05) உத்தரவிட்டுள்ளார். வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு, நகர்த்தல் பத்திரம் ஊடாக திங்கட்கிழமை (05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நிராகரிக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல நீடித்து, மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார். அதே நேரம் அனுமதி […]
மன்னாரில் இளம் தாயின் மரணம் தொடர்பில் வைத்தியசாலையின் தகவல்.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்த இளம் குடும்பப் பெண் மரணம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் இடம் பெற்று வருவதோடு, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முடிவடைந்த நிலையில் உரிய தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்தார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி பட்டதாரி இளம் குடும்ப […]