கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டம்

‘பாதீட்டுத் திட்டத்திலிருந்து ஒரு இலட்சம் வேலைகள் – கிராமிய அபிவிருத்தி’ வேலைத்திட்டத்தை இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்வதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த வேலைத்திட்டம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இணையம் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனையடுத்து கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் உள்ள 25 மாவட்டங்களையும் கேந்திரப்படுத்தி இந்த அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மக்களுக்காகத் தெரிவு செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இன்று முற்பகல் 8.52 அளவில் […]
புதிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள்

புதிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்கக்கூடிய இடங்கள் தொடர்பான அறிக்கையொன்றை உடனடியாகத் தயாரிக்குமாறு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கை மின்சார சபைக்கு உரித்தான மன்னார் ‘தம்பபவனி’ காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்துக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். இரண்டு பெரிய பருவக்காற்றுகளையும் எதிர்கொள்ளும் மன்னார் தீவின் தெற்குக்கடற்கரைப் பிரதேசத்தில், 13 கிலோ மீற்றர் நீளம் மற்றும் 150 ஹெக்டெயார் நிலப்பரப்பு, ‘தம்பபவனி’ காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்துக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. […]
வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு

ஹெரோயின், கொக்கேன் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி வாகனங்களை ஓட்டும் சாரதிகளை தேடும் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த மாதம் இடம்பெற்ற 39 முச்சக்கர வண்டி விபத்துக்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து விதிமீறல்களில் முச்சக்கர வண்டிகள் முன்னணியில் […]
இந்தியா மேலும் 1 பில்லியன் டொலர் கடனுதவி

இலங்கைக்கு மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை வழங்குவதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஏலவே இலங்கைக்கு 400 மில்லியன் டொலர்கள் கடனுதவியை இந்திய அரசாங்கம் வழங்கி இருந்த நிலையில், இன்று மேலும் 500 மில்லியன் டொலர் கடன் உதவிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அவரச எரிபொருள் கொள்வனவுக்காக இந்த கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக இன்னும் ஒரு பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கான […]
சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கோரிக்கை

பொருளாதார சிக்கல்களிலிருந்து மீளும் பொருட்டு, சர்வதேச நாணய நிதியத்திடம் தொழில்நுட்ப ஆதரவை கோரியுள்ளதாகவும், அதற்கிணங்க நிபுணத்துவ குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லும் திட்டம் தொடர்பில் இன்று (2) ஊடக சந்திப்பொன்றின்போது, எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். “நாங்கள் அதிகாரபூர்வமாக எதையும் செய்யவில்லை. அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளோம். அவர்களிடமிருந்து நிபுணத்துவ ஆலோசனையைப் பெறவுள்ளோம். சர்வதேச நாணய நிதியம் என்பது நெருக்கடியான சூழ்நிலையில் […]
பெப்ரவரி 7 முதல் மார்ச் 7ஆம் திகதி வரை பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை முன்னிட்டு பெப்ரவரி 7 முதல் மார்ச் 7ஆம் திகதி வரை சகல அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் […]
பாகிஸ்தானை விட அதிகரித்து வரும் இலங்கையின் பணவீக்கம்

ஆசிய பிராந்தியத்தில் இலங்கையின் பணவீக்கம் பாகிஸ்தானை விட வேகமாக அதிகரித்து வருவதாக இந்தியாவின் Business Standard இணையத்தளம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் 25 வீதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 22.1 ஆக பதிவாகியிருந்தது. மக்களின் பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பணவீக்கம் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளமை அரசாங்கம் வௌியிட்டுள்ள புதிய தரவுகள் மூலம் உறுதியாகின்றது. டிசம்பர் மாதம் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு வேகம் 12 .1 ஆக […]