நாட்டின் அபிவிருத்திக்கு நிபுணர்களின் உதவி அவசியம் – பிரதமர்

நாட்டின் அபிவிருத்திக்கு எதிர்காலத்திலும் நிபுணர்களின் உதவியை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு நிபுணர்களின் உதவி அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்களுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சுகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்திக்காகச் செயற்படுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் […]
பொருளாதார சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. சஜித்

நாட்டின் சகல பிரஜைகளுக்கும் பொருளாதார சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டி – தர்மகீர்த்திராம விகாரையில் இன்று இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். வறுமையின்றி வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்வதற்கான சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவு பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு மக்களுக்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நாட்டின் தன்னிறைவு மற்றும் இறைமைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டொலருக்காக ஏனைய நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் […]
இலங்கையுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – IMF
இலங்கை நிதி தொடர்பான கோரிக்கை விடுத்தால், அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதானி இதனைத் தெரிவித்துள்ளாரென வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொருளாதார பிரச்சினையைத் தீர்ப்பதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணத்துவ ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கை எழுத்து மூலம் விடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ முன்னதாக தெரிவித்திருந்தார். அதேநேரம், நிதி அமைச்சின் பேரண்ட நிதிப்பிரிவுக்கு ஆலோசனை பெறும் செயற்பாடாகவே சர்வதேச […]
பசளைகளை விநியோகிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

சிறுபோகத்துக்குத் தேவையான பசளைகளை, உரிய காலத்துக்குள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற பசளைச் செயலணிக் கூட்டத்தின்போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. பல்வேறு தொழில்நுட்ப முறைமைகள் பயன்படுத்தப்பட்டு, தேசிய அளவில் சேதனப் பசளை வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அதனால், அவற்றின் பயன்பாடுகள் தொடர்பில் விவசாயிகளுக்குரிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்படவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். சேதனப் பசளைப் […]
ஜனாதிபதியின் சுதந்திர தின உரை முழுவடிவம் இங்கே!

பொறுப்புகளை மறந்து உரிமைகளைப் பற்றி மட்டும் பேசுவது உகந்ததல்ல… நாடு எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நேர்மறையான அணுகுமுறையின் மூலம் பதிலளிக்க முடியும்… எப்போதும் நாட்டுக்கு முன்னுதாரணமாகச் செயற்படுங்கள்… வெற்றிகொள்ளப்பட்ட சுதந்திரம் எதிர்காலச் சந்ததியினருக்காக எப்போதும் பாதுகாக்கப்படும்… பெற்றுக்கொண்ட சுதந்திரத்தின் உயர்ந்தபட்ச பலனை அடைவதற்கு, அனைவரும் நாட்டுக்கான தமது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டுமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார். சுதந்திரமானதும் ஜனநாயகமானதுமான நாட்டின் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. அது போன்றே, பொறுப்புகளும் உள்ளன என்றும் எடுத்துரைத்த ஜனாதிபதி […]
பேஸ்புக்கிற்கு ஏற்பட்டுள்ள பேராபத்து!

உலகின் முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை 18 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா கூறியதாவது:- பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை கடந்த 3 மாதங்களில் 193 கோடியில் இருந்து 192.9 கோடியாக குறைந்துள்ளது. இதற்கு டிக்டொக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களுடனான போட்டியே காரணம். மேலும் விளம்பரதாரர்களும் பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதற்காக செலவிடும் தொகையை குறைத்துள்ளனர். நியூயோர்க் பங்குச்சந்தையில் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 20 […]
250 மில்லியன் ரூபா விவசாய இயந்திரங்கள் கையளிப்பு

நாட்டிலுள்ள 6 மாகாணங்களைச் சேர்ந்த 47 கமநலச் சேவை நிலையங்களுக்கான விவசாய இயந்திரங்களைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (03) இடம்பெற்றது. இதற்காகச் செலவிடப்பட்டுள்ள மொத்தத் தொகை 250 மில்லியன் ரூபாவாகும். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் […]