அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,800 கொள்கலன்கள் துறைமுகத்தில்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,800 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக, அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுமார் 500 அரிசி கொள்கலன்கள் அவற்றில் அடங்கியுள்ளன. அத்துடன், பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட மேலும் பல உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களும் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அந்த சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். டொலர் தொடர்பான பிரச்சினை உள்ளமையால், குறித்த கொள்கலன்களை விடுவிக்க மத்திய வங்கி தலையிட வேண்டும் என்றும் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. […]
கறுப்புச்சந்தையில் ஆயதக்கொள்வனவு – ஜெனீவா அமர்வில் ஆராயப்படாலம்

கறுப்புசந்தையில் பெற்ற டொலரை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளமை குறித்து இலங்கையில் உள்ள பல வெளிநாட்டு தூதரகங்களும் சர்வதேச அமைப்புகளும் கரிசனை வெளியிட்டுள்ளன. இலங்கை அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அது சர்வதேசமோதல்கள் குறித்த வழக்காறுகளை மீறும் செயல் அதனுடன் தொடர்புடைய ஏனைய மனித உரிமை பிரகடனங்களை மீறும் நடவடிக்கை என வெளிநாட்டு தூதரகங்கள் தெரிவித்துள்ளன. நிதியமைச்சர் பேட்டியொன்றின் போது வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து மனித உரிமை ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் கடும் விமர்சனத்தை […]
இலங்கையில் முதலாவது கொவிட் -19 அலையின் போது 7% பேர் வேலையை இழந்துள்ளனர்

முதலாவது கொவிட் -19 அலையின் போது நாட்டிலுள்ள ஊழியர்களில் 7% ஆனவர்கள் வேலையை இழந்துள்ள தாக புதிய அறிக்கை ஒன்று வெளிப்படுத்துகிறது. கொரோனா முதல் அலையின் தாக்கமானது தொழிலாளர் வர்க்கத்தின் மீதான அறிக்கையின் மூலம் அவதானிக்கப்பட்டதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே விவசாயத் துறையில் 64.3% சுயதொழில் செய்வோர் வழக்கமான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் 14.6% வழமையான விளைபொருட்களை விற்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம் சாராத சுயதொழில் […]
இலங்கை நிதியுதவி கோரினால் பேச்சுவார்த்தைக்கு தயார்: சர்வதேச நாணய நிதியம்!

டொலர் பற்றாக்குறையினாலேயே எண்ணெய்க்கான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடன் பிரச்சினைகளால் டொலர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதேவேளை, அரசாங்கம் நிதி உதவி கோரினால், இலங்கையுடன் மாற்று பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் இதுவரை நிதியுதவி கோரவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் மசாஹிரோ நொசாகி, AFP செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் ஆலோசனை பெற இலங்கை தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் பசில் […]
தடுப்பூசி பெறாதவர்களுக்கு பொது இடங்களுக்கு பிரவேசிக்க தடை

கொரோனா தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடாத நபர்கள் பொது இடங்களுக்குள் நுழைவதை தடை செய்யும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 30ஆம் திகதி முதல் இந்த உத்தரவானது நடைமுறைக்கு வருகிறது. தடுப்பூசி போடாத நபர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆதாரம் இல்லாமல் தனி நபர்கள் பொது இடங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தடுப்பூசியிலிருந்து விலக்கு பெற்றவர் […]
இலங்கையின் கறுவாவிற்கு ஐரோப்பிய சங்கம் வழங்கியுள்ள அங்கீகாரம்

இலங்கையின் கறுவாவிற்கு சிறு ஏற்றுமதி பயிர்களின் தனித்துமான அடையாளத்தை வழங்கும் புவியியல் குறியீடாக ஐரோப்பிய சங்கம் பதிவு செய்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் உற்பத்திப் பொருள், ஐரோப்பிய சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். கடந்த வருடத்தில் கறுவா ஏற்றுமதி மூலம் 230 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் […]
Red Bull உள்நாட்டு, வெளிநாட்டு நீர்ச்சறுக்கல் வீரர்களிடமிருந்து பெரு வரவேற்பு

Red Bull ஆனது, Red Bull Ride My Wave நிகழ்வின் 6ஆவது பதிப்பை அண்மையில் நிறைவு செய்தது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து துறைசார்ந்த மற்றும் ஆர்வமுள்ள பெருமளவிலான நீர்ச்சறுக்கல் பங்கேற்பாளர்கள் பங்கெடுத்திருந்தனர். இலங்கையை நீர்ச்சறுக்கலுக்கான (surfing) மையமாக நிலைநிறுத்துவதும், இந்த சுவாரஸ்யமான விளையாட்டுக்கு ஒரு தளமொன்றை உருவாக்குவதுமே இந்நிகழ்வின் நோக்கமாகும். Red Bull Ride My Wave நிகழ்வானது, கடந்த ஜனவரி 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் நாட்டின் தென் மாகாணத்தில் அமைந்துள்ள ஹிக்கடுவையின் […]