2 நாட்களில் சுமார் 50 இலட்சம் கிலோகிராம் நெல் கொள்வனவு

கடந்த இரண்டு நாட்களில் சுமார் 50 இலட்சம் கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நெற்கொள்வனவு சபையினால் ஒரு கிலோகிராம் நெல் 90 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படாத வகையில் நெற்கொள்வனவு இடம்பெறுவதாகவும் அவர் கூறினார். இதனிடையே, பெரும்போகத்தில் பாதிக்கப்பட்ட நெற்செய்கையாளர்களுக்கான நட்டஈட்டை வழங்கும் முறைமை தொடர்பான யோசனை, அமைச்சரவையில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார். நட்டஈட்டை வழங்குவதற்காக […]
மரக்கறி விலைகள் மீண்டும் வீழ்ச்சி

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக, தம்புள்ளை விசேட பொருளாதார மையத்தின் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து தம்புள்ளை பொருளாதார மையத்துக்கு பீட்ரூட் கிடைக்கின்றமையால், பீட்ரூட் கிலோகிராம் ஒன்றின் மொத்த விலை, 350 ரூபாவிலிருந்து 150 ரூபா வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குச் சமாந்தரமாக, ஏனைய மரக்கறிகளின் விலைகளும், 40 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதார மையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் […]
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகாிப்பு

கடந்த ஒரு மாதமாக உலக சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வரும் மசகு எண்ணெய் விலை தற்போது 94 அமெரிக்க டொலர்களை நெருங்கி வருகிறது. ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று 94 டொலரை நெருங்கியிருந்தது. இதேவேளை, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையானது கடந்த 2014 செப்டெம்பர் மாதம் முதல் அதாவது கடந்த 7 வருடங்களில் 100 டொலரை தாண்டியிருக்கவில்லை. இந்நிலையில், தற்போது ஏற்பட்டுவரும் இந்த சடுதியான விலை அதிகரிப்பை பார்க்கையில், எதிர்வரும் சில […]
உணவுப்பொருட்கள் இறக்குமதிக்காக இரு நாடுகளிடம் கடனுதவி பெறுகிறது இலங்கை!

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதிக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்காக இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடன் உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலரையும் அவுஸ்திரேலியாவிடம் இருந்து 200 மில்லியன் டொலரையும் கடனாக பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அரிசி, பருப்பு மற்றும் மருந்து உட்பட அத்தியாவசிய பொருட்களை இந்த கடன் உதவிகளின் […]
சதொசவிடமிருந்து 998 ரூபாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய விசேட பொதி!

நாடளாவிய ரீதியில் உள்ள சதொச வர்த்தக நிலையங்களில் 998 ரூபாவுக்கான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசி, நூடுல்ஸ், தேயிலை, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் அந்த பொதியில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், நுகர்வோருக்கு இலாபம் உள்ளது. சதொச வர்த்தக நிலையங்கள் இல்லாத பகுதிகளில் வசிப்பவர்கள் 1998 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொண்டு இந்த பொதியைப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்காக 200 ரூபா […]
இலங்கையில் மீண்டும் நடமாட்டத் தடை விதிக்கப்படுமா?

தற்போதைய கொரோனா பரவல் சூழ்நிலையில் நாட்டை முடக்குவதற்கோ அல்லது நடமாட்டத்தடை விதிப்பதற்கோ தயாரில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், தற்போது நாட்டை முடக்குவதற்கான தேவையில்லை. கொவிட்-19 பரவலில் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்கு செயலூக்கி தடுப்பூசியை பெற்றுக் கொள்வது அவசியமாகும் எனவும் இராஜாங்க அமைச்சர் சன்னஜயசுமன தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் நேற்றைய தினத்தில் 1,287 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. இதற்கமைய, இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த […]
உலக சந்தையில் தங்கத்தின் விலை

உலகளாவிய பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் நிலைமைகள் காரணமாக உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை மீண்டும் 1,800 அமெரிக்க டொலரை எட்டியுள்ளது. எவ்வாறாயினும், அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி வீதத்தை உயர்த்தினால் தங்கத்தின் விலையில் சரிவை எதிர்பார்க்கலாமென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! […]