பொருளாதாரத்தை சக்திமயப்படுத்தல் – பீரிஸ் – ஜெய்சங்கர் சந்திப்பு

இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை இன்று சந்தித்தார். இதுகுறித்து ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மிகவும் வினைத்திறனாக இந்த பேச்சுவார்த்தை அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை – இந்திய ராஜதந்திர உறவின் 75 ஆம் ஆண்டு பூர்த்தியைப் பொருத்தமான முறையில் அனுஷ்டிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. பொருளாதாரத்தை சக்திமயப்படுத்தல், அதற்காக சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக அவதானம் செலுத்தப்பட்டது. அத்துடன் இலங்கை – இந்திய மீனவர்கள் […]
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள் அறிவிப்பு

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள், இலங்கை போத்தல் குடிநீர் சங்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 500 மில்லிலீற்றருக்கான விலை 50 ரூபாவாகவும், ஒரு லீற்றருக்கான விலை 70 ரூபாவாகவும், 1.5 லீற்றருக்கான விலை 90 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 5 லீற்றர் போத்தல் குடிநீரின் விலை 200 ரூபாவாகவும், 7 லீற்றருக்கான விலை 240 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான கட்டுப்பாட்டு விலைகள், அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், போத்தல் குடிநீருக்கான புதிய […]
வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கான அறிவிப்பு

நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் கொரோனா காப்புறுதியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அது 7,500 அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் குறித்த காப்புறுதியானது 5,000அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. நாட்டின் சுற்றுலா வலயத்திற்கு அருகில் பிரத்தியேகமானதொரு காவல்துறை பிரிவு ஒன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கல்கிசை மற்றும் உனவட்டுன பகுதியில் அதற்கான கட்டட நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த மாதத்தில் மாத்திரம் 82, 327 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு […]
ஆள்மாறாட்டம் செய்பவர்களுக்கு பரீட்சை எழுத வாழ்நாள் தடை!

கொவிட்- 19 தொற்றினால் பிற்போடப்பட்ட கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன. கல்வி பொதுத் தராதர உயர் தரப்பரீட்சையானது, இன்றைய தினம் முதல், எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதிவரையில் 2,437 பரீட்சை மையங்களில் இடம்பெறுகின்றது. இந்த பரீட்சைக்கு 345,242 பரீட்சார்த்திகள் தோற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களில், 279, 141 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 66, 101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குகின்றனர். பரீட்சை விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் […]
இலங்கையில் இந்தியப் படகுகளின் ஏல விற்பனை சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது

யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகள் இன்று சற்றுமுன் ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பணி கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் ஆரம்பமானது. இலங்கையின் 5 துறைமுகப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான ட்ரோலர் விசைப் படகுகள் இன்று முதல் 5 தினங்களிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ள படகுகளை கடந்த ஒருவாரமாக 50ற்கும் அதிகமனோர் பார்வையிட்டனர். இவ்வாறு பார்வையிட்ட படகுகளில் காரைநகரில் உள்ள படகுகளே இன்று ஏலம்விடும் […]
பெற்றோலின் விலை அதிகரிக்கிறது!

லங்கா ஐஓசி நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் பெற்றோலின் விலையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி ஒரு லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை ரூ,177 இலிருந்து ரூ.184 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலை ரூ.121 இலிருந்து ரூ.124 ஆக அதிகரித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் […]
புதிய சீமெந்து தொழிற்சாலை

தற்போது நிலவும் சீமெந்துக்கான தட்டுப்பாடு எதிர்வரும் இரு வாரங்களில் நிவர்த்திக்கப்படுமென நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. சீமெந்து உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சியே சந்தையில் சீமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டமைக்கான காரணமென இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், எதிர்வரும் மார்ச் மாதத்தில் புதிய சீமெந்து தொழிற்சாலையொன்று திறக்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னர் சீமெந்துக்கான தட்டுப்பாடு நீங்குமெனவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், சீமெந்தின் விலையில் மாற்றத்தை மேற்கொள்வது தொடர்பில் எந்தவொரு நிறுவனமும் இதுவரை தமக்கு அறிவிக்கல்லையென இராஜாங்க அமைச்சர் […]