புதிய ரக கார் சந்தைக்கு வருகிறது! 12 லட்சத்துக்கு இலங்கையில் நான்கு சக்கர வாகனம்.

விரைவில் உள்ளூர் சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றாக, இலங்கையில் நான்கு சக்கர வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கார் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் உள்ளூர் சந்தையில் சுமார் 12 லட்சம் ரூபா விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் உள்ளூர் நிறுவனம் கூறுகிறது. இந்தக் காரில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும் என்பதுடன் 200 சிசி திறன் கொண்டதாகும். இதில் 814 கிலோ எடையைச் சுமந்து செல்லக்கூடிய இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் […]

வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சியடைந்துள்ளது!

இலங்கை மத்திய வங்கியினால் நாட்டின் தங்கத்தின் கையிருப்பில் மேலும் ஒரு தொகுதி விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் தங்கத்தின் கையிருப்பு 3.1 டன்னில் இருந்து 1.6 ஆக குறைவடைந்துள்ளது. அத்துடன் தங்கத்தின் கையிருப்பு பெறுமதி கடந்த டிசம்பர் மாதம் 172 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து ஜனவரி மாதம் 92 மில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை 2021ஆம் ஆண்டு டிசம்பரில் 3.1 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட வெளிநாட்டு கையிருப்பு கடந்த ஜனவரி மாதம் 2.3 பில்லியன் […]

சர்ச்சில் பயன்படுத்திய தங்க டாய்லெட் அபேஸ்

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய தங்கத்தால் செய்யப்பட்ட டாய்லெட் மாயமானது. போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். லண்டன் வுட்ஸ்டாக் பகுதியில் பெலன்கிம் அரண்மனை உள்ளது. சர்ச்சில் குடும்பம் வாழ்ந்த அரண்மனை ஆகும். இங்கு வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய தங்கத்தினால் செய்யப்பட்ட டாய்லெட் வைக்கப்பட்டிருந்தது. இதனை திடீரென காணவில்லை. 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்டது இது. இதன் மதிப்பு ஒரு மில்லியன் டாலர் ஆகும். போலீசார், கூறுகையில்; இந்த அருங்காட்சியகத்தில் டாய்லெட் வைக்கப்பட்டிருந்த இடத்தில் சேதம் […]

இலங்கையில் வாகனங்களை பொருத்தும் தரத்தினை அபிவிருத்திசெய்ய நடவடிக்கை!

வாகனங்களை இலங்கையில் பொருத்துதல் தொடர்பான தரத்தினை அபிவிருத்தி செய்ய கைத்தொழில் அபிவிருத்தி சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் சிறந்த தரத்தை கொண்ட வாகனங்களை உருவாக்க முடியும் என கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் டபிள்யு ஏ.பி கபில நிஸாந்த தெரிவித்துள்ளார். வாகனம் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கைத்தொழில் அபிவிருத்தி சபையின் நிபுணத்துவம் வாய்ந்த நவீன தொழிநுட்ப நடவடிக்கைகளை பெற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தொழிலில் ஈடுபடுபவர்களின் தொழிற்சாலைகளை நிர்மாணிப்பதற்கான காணி போன்றவற்றை […]

இலங்கையில் இந்திய மீனவர்களது 139 இழுவைப்படகுகள் 59 இலட்சம் ரூபாய்க்கும் விற்பனை!

காரைநகர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களது இழுவைப்படகுகள் இன்றைய தினம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளாக இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களது இழுவைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு காரைநகர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் குறித்த படகுகள் மீதான நீதிமன்ற செயற்பாடுகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் அவற்றினை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. அந்த வகையில் இன்றைய தினம் குறித்த படகுகள் ஏலத்தில் […]

இலங்கையில் அதிக பனிப்பொழிவால் பயிர்களுக்கு பாதிப்பு

இலங்கை நுவரெலியாவில் நேற்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் பனிப் பொழிவு அதிகமாகக் காணப்பட்டதால் புற்றரைகளும் தேயிலைச் செடிகளும் உருளைக் கிழங்கு மற்றும் மரக்கறிச் செடிகளும் பாதிப்படைந்தன. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 📱 […]

இலங்கையின் ஏற்றுமதி நடவடிக்கைகளை ஊக்குவிக்க ஜேர்மன் உதவி

இலங்கையின் ஏற்றுமதி நடவடிக்கைகளை ஊக்குவிக்க ஜேர்மன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைப்பு முன்வந்துள்ளது. இலங்கையின் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான இறக்குமதியாளர்களை தெரிவு செய்வதற்கு இந்த அமைப்பு முன்வந்துள்ளது. இந்த அமைப்பின் சர்வதேச கண்காட்சி ஒன்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ம் திகதி முதல் 7ம் திகதி வரை பேர்லினில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பழ வகைகள், மரக்கறிகள் என்பனவற்றை ஏற்றுமதி செய்யும் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு இந்த கண்காட்சி மூலம் நன்மை கிடைக்கப்பெறும் என […]