சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடு இலங்கை!

இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடாகும் என்று பல நாடுகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனால் இந்த வருடத்தில் 1.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். எதிர்பார்த்த அளவில் சுற்றுலா பயணிகளின் வருகை இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார். இதற்காக விசேட பிரச்சார நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை மக்கள் கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டிகளை […]

அத்தியாவசியப் பொருட்கள் கொள்கலன்களை உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பது தொடர்பில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சந்தையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக, நிதி அமைச்சர் […]

25 வீத மேலதிக கட்டணம் விதிக்கும் வர்த்தமானி வெளியீடு

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு நிதியம் என்பனவற்றை 25 வீத மேலதிக கட்டணத்தை(surcharge) விதிக்கும் சட்டமூலத்தில் உள்ளடக்குவதற்கு சரத்துக்கள் தயார் செய்யப்பட் டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஊழியர் சேமலாப நிதியம் உட்பட பல நிதிகளுக்கு 25 வீத மேலதிக கட்டணம் அறவிடப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார். 2000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரிக்குட்பட்ட வருமானம் கொண்ட நபர், கூட்டு முயற்சி அல்லது நிறுவனங்களின் வரிக்குட்பட்ட வருமானத்துக்கு 25 […]

உந்துருளி, முச்சக்கரவண்டிகளுக்கு மாற்றீடாக இலங்கையில் உருவாகும் புதிய வாகனம்

உந்துருளிகள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றீடாக, உள்நாட்டில் நான்கு சக்கர வாகனமொன்று உருவாக்கப்பட்டுள்ளது இந்த வாகனம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் உள்ளூர் சந்தையில் சுமார் 12 இலட்சம் ரூபாவுககு அறிமுகப்படுத்தப்படும் என்றும் குறித்த உள்ளூர் நிறுவனம் கூறுகிறது. இந்த வாகனத்தில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும் என்றும் 200சிசி இயந்திர வலு கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 814 கிலோ எடையை சுமந்து செல்லக்கூடிய இயலுமை குறித்த வாகனம் கொண்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் […]

திருமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தம்

ட்ரிங்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் (தனியார்) நிறுவன ஒப்பந்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் குறித்த ஒப்பந்தம் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், லங்கா ஐஓசி நிறுவனம் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தன. தற்கமைய இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் வியாபார நடவடிக்கைகளுக்காக 24 தாங்கிகள் கையளிக்கப்பட்டுள்ளன. லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால் தற்போது பயன்படுத்தப்படும் 14 எண்ணெய் தாங்கிகள் குறித்த நிறுவனத்திற்கு தொடர்ந்தும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஏனைய […]

மேலும் 11 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடல் எல்லைக்கு அத்துமீறி பிரவேசித்து, சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்போது, மூன்று மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று (7) இரவு நெடுந்தீவுக்கு அருகில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். இந்த 11 இந்திய மீனவர்களையும் மயிலிட்டி கடற்றொழில் திணைக்களத்தினூடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு […]

ஆசிரியர்களுக்கு 5, 000 ரூபா கொடுப்பனவு

பிரிவெனா ஆசிரியர்கள், அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரச அனுமதிபெற்ற விசேட உதவி பாடசாலைகளின் ஆசிரியர்களுக்காக 5, 000 ரூபா கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதிபர் – ஆசிரியர் சம்பள குறைபாடுகளை நீக்குதல் தொடர்பான அமைச்சரவை தீர்மானத்திற்கமைய இல 03/2016 (IV) பொது நிர்வாக சுற்றறிக்கை வெளியிட்பட்டது. இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளை, மேற்குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் ஏற்புடையதாக்கிக் கொள்வதற்காக கல்வியமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் […]