டீசல் ரூ.48, பெட்ரோல் ரூ.15 நட்டம்

பெப்ரவரி மாதத்தைப் போன்று மசகு எண்ணெயின் விலை இதே நிலையில் நீடித்தால் டீசல் லீற்றருக்கு 48.30 ரூபா நட்டம் ஏற்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. மேலும் ஒரு லீற்றர் பெற்றோல் ஒன்றின் விலை 15.68 ரூபா நட்டமாகும் என அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். மேலும், இந்தியன் எண்ணெய் நிறுவனம் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ள நிலையில், சிபெட்கோ விற்பனை நிலையங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகளவில் வருவதால்,தங்களின் நஷ்டம் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். […]
மோடி இலங்கை வருகின்றார்

இந்திய பிரதமர்நரேந்திரமோடி மார்ச்மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ளவதற்காக இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என தெரிவித்துள்ளன. இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் எனவும் வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் இந்தியாவிற்கு செல்லவுள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com […]
நாட்டில் 611 மில்லியன் டொலர் பெறுமதியான பிளாஸ்டிக் பொருட்கள்

2020ஆம் ஆண்டு 611 மில்லியன் டொலர் பெறுமதியான பிளாஸ்டிக் பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். UN COMTRADE தரவுத்தளத்தின் மூலம் இது தெரியவந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். சுற்றாடல் நீதிக்கான மத்திய நிலையத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஹேமந்த விதானகே உள்ளிட்ட சூழல் ஆர்வலர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது. சிங்கராஜ வன வலயத்தால் கையகப்படுத்தப்படவுள்ள ஏனைய காடுகள் […]
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுப்பும் டொலருக்கு 240 ரூபா….

புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் 240 ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் தொழிலாளர் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (08) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா உரையாற்றுகையில், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்த நாட்டுக்கு அனுப் பும் டொலருக்கு குறைந்தபட்சம் 240 ரூபா செலுத்துமாறு திறைசேரியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். […]
புத்தாண்டுக்கு முன்னர் 10 புதிய தொழிற்சாலைகள்

அடுத்த இரண்டு வருடங்களுக்கு தொழில் வழங்குவதற்கு வழியில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெலியத்த பிரதேசத்தில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வேலைவாய்ப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் நிதி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் தமிழ்,சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 10 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி […]
தம்புள்ளை சந்தையில் யாழ் பீட்ரூட்

யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ‘பீட்ரூட்’ உள்ளிட்ட மரக்கறி வகை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு தற்பொழுது வர ஆரம்பித்துள்ளது. இங்கு ஒரு கிலோ பீட்ரூட் நூறு ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இங்கு ஒரு கிலோ 300 ரூபாவுக்கு மேற்பட்ட வகையில் விற்பனை செய்யப்பட்டது. கூடுதலான மரக்கறி வகைகள் இங்கு வருவதனால் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க […]
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

07.02.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து […]