இன்றைய தங்க விலைச் சுட்டெண்

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று (23) திங்கட்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 26,375 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 211,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும்,22 கரட் ஒரு கிராம் தங்கம் 24,400 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 195,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

அநுரவின் வெற்றியை கொண்டாடும் யாழ்ப்பாணம்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆதரவாளர்கள் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் இன்று காலை பொங்கல் பொங்கி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை ஆதரவாளர்கள் கொண்டாடியுள்ளனர். இதன்போது பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுர தெரிவு!

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக அதிககூடிய வாக்குகளை பெற்று அனுகுமார திசாநாயக்க தெரிவாகியுள்ளார். இலங்கையில் நேற்று நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களின் மனதை வென்று அனுர வெற்றியீட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டானது 5 வருடத்தில் தனது 3% வாக்கு வங்கியை 50% இற்கு மேலாக உயர்த்தியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட 21 அமைப்புக்களின் அரசியல் கூட்டாக அனுர குமார திசனாயக்கவை முன்னிறுத்தி இம்முறை இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கியது. 73 பேரைக்கொண்ட தேசிய […]

டொலர்களை திருப்பிச் செலுத்திய இலங்கை.

இலங்கை அண்மையில், 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியாவுக்கு திருப்பிச் செலுத்தியதுடன், ஆசிய கிளியரிங் யூனியனுக்கு செலுத்த வேண்டிய 2.2 பில்லியன் டொலர் கடனுடன் கூடுதலாக 200 மில்லியன் டொலர்களை திருப்பிச் செலுத்தியதாக நிதி அமைச்சக தரப்புகள் தெரிவித்துள்ளன. இலங்கை மத்திய வங்கி, ஆசிய கிளியரிங் யூனியனின் கடன் மற்றும் இந்தியாவின் 400 மில்லியன் டொலர் பரிமாற்றத்தை தவணைகளில் திருப்பிச் செலுத்தி வருகிறது. இதன்படி 2 பில்லியன் டொலர்களை ஏசியூவுக்கும், 400 மில்லியன் டொலர்கள் இந்திய ரிசர்வ் […]

பேஸ்புக்கில் இன்னும் தொடரும் பிரச்சார நடவடிக்கைகள்..

சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரங்களை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், பிரசாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவரிடம் நாம் கேட்டபோது, தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரத்தை நிறுத்துவது நடைமுறையில் கடினமாகிவிட்டது. சமீபத்தில், சமூக ஊடகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ள கிட்டத்தட்ட எண்பது பேர் தேர்தல் ஆணையத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களைத் தடுக்க அறிவுறுத்தப்பட்டனர் இது தொடர்பில் எமது தேர்தல்கள் […]

இலங்கையில் 38 நாடுகளுக்கான விசா கட்டணம் ரத்து !

சிங்கப்பூரின் நெறிப்படுத்தப்பட்ட ‘one-chop’ அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், 38 நாடுகளுக்கான விசா கட்டணத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஜனாதிபதிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த தீர்மானம் விசா சாளரங்களில் நெரிசலைக் குறைக்க உதவும் என வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.