மன்னார் நீதிமன்றுக்கு கைவிலங்குடன் அழைத்துவரப்பட்ட மருத்துவர் அருச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வைத்தியர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை,பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தமை, அரச சேவைக்கு இடையூறு விளைவித்தமை போன்ற குற்றசாட்டுக்களின் அடிப்படையில் வைத்தியர் அருச்சுனா கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் இன்று மன்னார் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சற்று முன் அவர் பேஸ்புக்கில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இதே வேளை மன்னாரில் அர்ச்சுனாவைப் பார்ப்பதற்காக பாடசாலை மாணவர்கள் சீருடைகளுடன் வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. பெருமளவு மக்கள் அழுத வண்ணம் அர்ச்சுனாவைத் துாக்கிச் சென்றதாகவும் தெரிவருகின்றது.