கொழும்பில் நுகர்வோர் பணவீக்க விகிதம் அதிகரிப்பு!

2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய , 2024 ஜூலை மாதத்திற்கான கொழும்பு நகர சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் 2.4சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ஜூன் 2024 இல் 1.7சதவீதமாக பதிவாகியிருந்தது. உணவு வகையின் ஆண்டு பணவீக்கம் ஜூலை 2024 இல் 1.5மூ ஆக உயர்ந்ததுள்ளதுடன், ஜூன் 2024 இல் அது 1.4சதவீதமாக காணப்பட்டது. மேலும், 2024 ஆம் […]
‘இதயம்’ சின்னத்தில் ரணில்?

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு, அது குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் தம்மை ஆயத்தப்படுத்தி வருகின்ற நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகின்றார். இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்க “இதயம்” சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக பிரதான இணையத்தளங்களில் செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் அவ்வாறான பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. ஆகவே, ஜனாதிபதி ரணில் “இதயம் ” சின்னத்தில் போட்டியிடுவதாக பகிரப்படும் செய்திகள் உண்மையா என factseeker ஆராய்ந்து பார்த்தது. […]
இஸ்மாயில் ஹனியே படுகொலை: ஜனாதிபதி கண்டனம்!

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின்(Ismail Haniyeh) படுகொலைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டனம் வெளியிட்டுள்ளார். ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலை செய்யப் பட்டதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அத்தகைய செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவிற்கான கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன், பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று, பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன. ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்கள் திருவிழா இடம்பெறவுள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்!

இன்று திங்கட்கிழமை (ஜூலை 29) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 298.4850 ரூபாவாகவும், விற்பனை விலை 307.7765 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
நாமலுக்கு எதிராக பொலிஸ் நிலையம் சென்ற பந்துல..

அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு எவ்வித அறிவித்தலும் வழங்காமல் ஹோமாகம பொதுஜன பெரமுன கூட்டத்தை ஏற்பாடு செய்தமைக்காக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக பந்துல குணவர்தன ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாமல் ராஜபக்ஷ ஒழுக்கத்தை மீறியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் இது போன்ற விஷயங்களில் போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாது என போலீசார் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது மேலும் இந்த தொகுதிக் குழுக் கூட்டத்தில் ஹோமாகம […]
கனடாவுக்கு அனுப்பும் முகவர்கள், விசேட அதிரடிப்படையினரால் கைது..!

ஐரோப்பா உட்பட பல நாடுகளுக்கு இலங்கையர்களை அனுப்புவதாக கூறி பாரிய மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கனடா, ருமேனியா, கட்டார், மலேசியா நியூசிலாந்து உட்பட பல நாடுகளில் வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக மோசடி செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.