ஐரோப்பா உட்பட பல நாடுகளுக்கு இலங்கையர்களை அனுப்புவதாக கூறி பாரிய மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நான்கு நாட்களில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கனடா, ருமேனியா, கட்டார், மலேசியா நியூசிலாந்து உட்பட பல நாடுகளில் வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக மோசடி செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Post Views: 131